சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 20, 2019
Advertisement
  'டவுட்' தனபாலு

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன்: மோடிக்கு எதிராக எல்லாரும் ஒன்றாக இருக்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் மட்டுமல்ல; மம்தா, சந்திரபாபு, மாயாவதி உட்பட அனைவரும் ஒன்றாக சேர்வோம்.

டவுட் தனபாலு: தேர்தலுக்கு முன், இதைச் சொல்லி சேர்ந்திருந்தால், மக்களிடம் ஓரளவு எடுபடும்... உங்களைப் பாதுகாக்க, ஒன்று சேர இருப்பதாகச் சொல்லுங்க... அதை விடுத்து, எதற்கு இந்த கதையெல்லாம்... இது, எடுபடுறது, 'டவுட்' தான்...!


பா.ம.க., நிறுவனர்ராமதாஸ்: மது விலக்கை நடைமுறைப்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது, மது விலக்கை கொண்டு வர வேண்டும்.

டவுட் தனபாலு: இதைத் தான், பல காலமா ஆட்சியாளர்கள் சொல்லி வர்றாங்க... அப்போதெல்லாம், 'இந்த அரசுக்கு, பணம் தான் முக்கியம்... மதுவால் வரும் பணம், மானக்கேடு'ன்னு, எகிறிக் குதிச்சீங்க... பணம் ரொம்ப ரொம்ப முக்கியம்கற ஞானோதயம், இப்போ எப்படி உங்களுக்கு வந்தது என்பது தான்,என்னோட, 'டவுட்!'


காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன்: கடந்த, 50 ஆண்டுகளாக, இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும், சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத் தான், 'சிஸ்டம் கெட்டு விட்டது' என்று, ரஜினி கூறி உள்ளார். சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு, ரஜினி ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார்.

டவுட் தனபாலு: ரஜினியின் கருத்துக்கு, அருஞ்சொற்பொருள் விளக்கம் அளிப்பதே, உங்களுக்கு வேலையாகிடுச்சு... எதையும் கொஞ்சம் விலாவாரியாக, அவர் வாயாலேயே சொல்லச் சொன்னால் தானே, மக்களிடம் தாக்கம் ஏற்படும்... இதைப் பற்றி, ரஜினியிடம் வலியுறுத்துவீங்களா என்பது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X