பதிவு செய்த நாள் :
பிளவு?
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில்...
சோனியாவை சந்திக்க மாயாவதி மறுப்பு

புதுடில்லி :தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், 'மீண்டும், பா.ஜ., ஆட்சி அமையும்' என, கூறியுள்ளன. அதனால், புதிய ஆட்சிஅமைப்பது தொடர்பாக, காங்., மூத்த தலைவர், சோனியாவை சந்திக்க, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி மறுத்துள்ளதாக தெரிகிறது.

எதிர்க்கட்சி,மெகா கூட்டணி,பிளவு?,சோனியா,சந்திக்க,மாயாவதி, மறுப்பு


மேலும், 23ல் நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும், மாயாவதி பங்கேற்க மாட்டார் என, தெரிகிறது. லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும், 23ல், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், ஆந்திர முதல்வரான, தெலுங்கு தேசம் கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடுஈடுபட்டுள்ளார்.

கருத்துக் கணிப்பு


கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் தலைவர், ராகுல், மூத்த தலைவர், சோனியா மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து, ஆலோசித்து வருகிறார்.இந்தத் தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அனைத்து எதிர்க்கட்சி களும் இணைந்து, ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன், சந்திரபாபு நாயுடு ஆலோசித்து வந்தார்.அந்த முயற்சியின் ஒரு கட்டமாக, உ.பி., முன்னாள் முதல்வர்களான, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, சமாஜ்வாதி தலைவரான, அகிலேஷ் யாதவ் ஆகியோரை, லக்னோவுக்கு சென்று சந்தித்தார்.

இந்த பேச்சுகளுக்குப் பின், மாயாவதி, ஐ.மு., கூட்டணியின் தலைவரான, சோனியாவை, டில்லியில் நேற்று சந்திப்பதாக,தகவல்கள் வெளியாகின.இதற்கிடையே, நேற்று முன்தினம், ஏழாவது கட்ட ஓட்டுப் பதிவு முடிந்த பின், பல்வேறு, 'டிவி சேனல்'கள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. அதில், 'பா.ஜ.,தலைமையிலான, தே.ஜ.,

கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்' என, கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில், சோனியா - மாயாவதி இடையேயான சந்திப்பு, நேற்று நடக்க வில்லை. ''மாயாவதி டில்லிக்கு செல்வதாக எந்த பயணத் திட்டமும் இல்லை; அவர், லக்னோவில் தான் இருக்கிறார்,'' என, பகுஜன் சமாஜ் மூத்த தலைவர், சதீஷ் சந்திர மிஸ்ரா கூறி உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய மெகா கூட்டணியில், பகுஜன் சமாஜும் இடம்பெற்றிருந்தது. ஆனால், காங்., தலைவர், ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டதை, மாயாவதி விரும்பவில்லை.

இதையடுத்து, அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து,உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலைசந்தித்தார், மாயாவதி.பிரசாரத்தின்போது, பிரதமராகும் தன் விருப்பத்தை, அவர் வெளிப்படுத்தினார்; அதற்கு,அகிலேஷ் யாதவும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

சந்தேகம்


முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும், 23ல், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும், டில்லியில் சந்திப்பது குறித்து பேச்சு எழுந்தது. அப்போதே, அதற்கு, மாயாவதி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.'தற்போது கருத்துக் கணிப்புகள், பா.ஜ., கூட்டணிக்கு சாதகமாக இருப்பதால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

'அதனால், சோனியாவை சந்திக்க, மாயாவதி விரும்பவில்லை என, கூறப்படுகிறது. அதனால் தான், இந்த சந்திப்பு நடக்கவில்லை' என, பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். இந்நிலையில், வரும், 23ல், டில்லியில், அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு, சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.அதில், மாயாவதிமற்றும் அகிலேஷ்யாதவ் பங்கேற்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

அகிலேஷ் சுறுசுறுப்பு


தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில்,

Advertisement

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை, கூட்டணிக் கட்சியான சமாஜ்வாதியின் தலைவர், அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்தார்.உத்தர பிரதேசத்தில் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், பகுஜன் சமாஜ், 38 தொகுதிகளிலும்; சமாஜ்வாதி, 37 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மற்றொரு கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய லோக்தளத்துக்கு, மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்., தலைவர் ராகுல் போட்டியிடும், அமேதி மற்றும் மூத்த தலைவர் சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியில், இந்தக் கூட்டணி போட்டியிடவில்லை.

கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., 71, அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம், இரண்டு தொகுதிகளில் வென்றன. தற்போது வெளியாகி உள்ள, கருத்துக் கணிப்புகளில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும் என, கூறப்பட்டுள்ளது. சில கருத்துக் கணிப்புகளில், இந்தக் கூட்டணிக்கு, 40 இடங்கள் வரை கிடைக்கும் என, கூறப்படுகிறது.இந்நிலையில், மாயாவதியை, அவரது இல்லத்தில் சந்தித்தார் அகிலேஷ். கருத்துக் கணிப்பு குறித்தும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

சந்திரபாபு - மம்தா சந்திப்பு


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு, நேற்று கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தாவை சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக, நாளை, டில்லியில் தேர்தல் ஆணையர்களை சந்தித்து வலியுறுத்த வரும் படியும், மம்தாவுக்கு, சந்திரபாபு அழைப்பு விடுத்தார்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
22-மே-201913:48:03 IST Report Abuse

Manianவாரம் ஆளுக்கு இரெண்டு நாட்கள் பிரதமர் பதவி, வெள்ளி கோவிலுக்கு போக, சனி, ஞாயிறு ரெஸ்ட். பிரச்சினை தீர்ந்தது.

Rate this:
Soundar - Chennai,இந்தியா
21-மே-201919:37:44 IST Report Abuse

SoundarOpposition parties do not have any good intention except to protect the looted public resources and loot further. God Almighty is not on their side, they will be running out on 23rd March.

Rate this:
Manian - Chennai,இந்தியா
22-மே-201913:53:52 IST Report Abuse

Manianகடவுளை இங்கே இழுக்கதிர்கள் அவரக்ளின் உருவம் வெளி நாடு மியூசியங்களில் அல்லவா இருக்கின்றன அப்பாலே லஞ்சம் வாங்குறவன் கொடுக்கறவன் எல்லமே அவருக்கு ஒண்ணுதானே ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மே-201917:15:27 IST Report Abuse

Endrum Indianஎனக்கு வந்த வாட்ஸப் மூன்று கிழவிகளும் பக்கத்தில் (மைனோ , தலித் மாயாவாந்தி, முஸ்லீம் பேகம் மும்தாஜ்)ஒண்ணுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும், இன்னொண்ணுக்கு இந்தி மட்டுமே தெரியும், இன்னொண்ணுக்கு வாங்கலாம் மட்டுமே தெரியும். ஆனால் 3 பேரும் ஒருவரிடம் இன்னொருவர் தங்கள் பாஷையில் பேசுவர்??? ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு புரியாது என்ற தசாரணையில் வந்திருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதெல்லாம் சகஜமப்பா இவர்கள் மத்தியில்???

Rate this:
Manian - Chennai,இந்தியா
22-மே-201913:52:09 IST Report Abuse

Manianஅட நீங்க ஒன்னு, மூணு பேத்தையும் எவனாவது காட்டிகிடடதான் இந்த பிரிச்சினை. இவிங்க முக பாவனையால் பேச்சுவாங்க. ...

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X