பதிவு செய்த நாள் :
கருத்து கணிப்புகளால் டி.ஆர்.எஸ்., கலக்கம்

ஐதராபாத்:கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதால், மூன்றாவது அணி அமைக்கும் கனவில் இருந்த, டி.ஆர்.எஸ்., எனப்படும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான, சந்திரசேகர ராவின் நடவடிக்கைகளில், திடீர் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கருத்து கணிப்புகள், டி.ஆர்.எஸ்., கலக்கம்


தெலுங்கானாவில், முதல்வர்,சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைவதை தடுக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பேசி வருகிறார்.

இதற்கிடையில்,சந்திரசேகர ராவ், பா.ஜ., - காங்., அல்லாத கூட்டணி ஆட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.இந்த கூட்டணியில், தெலுங்கு தேசத்தைச் சேர்க்க, இவர் விரும்பவில்லை. இருவருமே, லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, தனி பெரும்பான்மை கிடைக்காது என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.இதில், அனைத்து கருத்துக் கணிப்பு களும், 'பிரதமர் மோடி மீண்டும், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பார்'என, தெரிவித்து உள்ளன. இதனால், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த, சந்திரசேகர ராவின் நடவடிக்கைகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'பா.ஜ., மற்றும் காங்., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என, நம்பினோம். கருத்துக் கணிப்புகள், அதற்கு நேர்மாறாக உள்ளன. நாங்கள் எதிர்பார்த்தது நடக்காது போல் உள்ளது' என்றார்.

'எதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது'


'பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 23ம் தேதி மாலை வரை நீடிக்கும் என்பது கூட உறுதியில்லை' என, சிவசேனா தெரிவித்துள்ளது. லோக்சபாவுக்கு, ஏழுகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும், மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என, தெரிவித்துள்ளன.

Advertisement

இது குறித்து, பா.ஜ., வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை:மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைய விடாமல் தடுக்கும் ஒரே எண்ணத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றன. பல கட்சிகளின் ஆதரவில், மத்தியில் பலவீனமான அரசு அமைவது, நாட்டுக்கு நல்லதல்ல. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, அங்கும் இங்கும், தேவையில்லாமல் ஓடுகிறார்.

இந்த கூட்டணி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 23ம் தேதி மாலை வரை நீடிப்பதே உறுதியில்லை. இந்த கூட்டணியில், பிரதமராகும் ஆசையில் ஐந்து பேர் உள்ளனர். இந்த ஆசை, நிச்சயம் நிராசையில் தான் முடியும்.ஆந்திராவில், தெலுங்கு தேசம் வெற்றி பெறுவதே சந்தேகமாக உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு, தேவையற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
22-மே-201908:03:01 IST Report Abuse

oceஓய் அப்படி ஒரு ஓரமா உட்கார்ந்து முக்காடு போட்டு அ.ழு.

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
21-மே-201920:15:19 IST Report Abuse

பஞ்ச்மணிஎன்ன செய்ய சம்பாரிச்ச / சம்பாரிக்க போற காசை பாதுகாக்க ஒரு சரியான அமைப்பு தான் இந்த அரசியல் கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சோம்னா இவங்க தேர்தல்ல செலவு பன்றதேல்லாம் ஒரு வகையான முதலீடு பின்னால சம்பாரிச்சுக்கலாம்ன்னு ஒரு கணக்கு அது எதிர் கட்சி ஆகட்டும் இல்லாட்டி ஜாக்பாட் அடிச்ச மாதிரி ஆளுங்கட்சி ஆனாலும் சரி நம்ப கிட்ட ஓட்டு கேட்டு வர்ற எந்த வேட்பாளரும் சாதாரண கார்ல வருவதில்லை ஒரு convoy அதாகபட்டது குறைந்த பட்சம் ஒரு 10 முதல் 15 வாகனம் அதுவும் வேட்பாளர் பயணம் செய்யற வண்டி கண்டிப்பா பெரிய brand வண்டி அப்புறம் தொண்டர் அடிபொடிகள் கூட்டம் இது தானா செர்ந்த கூட்டம் கிடையாது ஒவ்வோன்னுக்கும் துட்டு வெட்டியானும் ஆக மிக பெரிய முதலீடு மிக மிக பெரிய சம்பாத்தியம் ஆக மொத்தம் ஓட்டு போடறவன் முட்டாபய (நான் உள்பட) ஓட்டன்னிக்கு லீவுக்கு டீவி முன்னாடி உட்காந்து நான் போடற ஓட்டுலேயா நாடு நல்லாகப் போகுதுன்னு வியாக்யானம் பேசிட்டு ஓட்டு போடாம இருந்தவன் அடி முட்டாப்பய குறிப்பா தென் சென்னை மக்கள் இதுல ரொம்ப விவரம் வெயில் ஜாஸ்தி அதனால போகலைன்னு ஒரு காரணம் வேற இப்படி இருந்தா நாம நினைக்குற ஜனநாயகம் எங்க வரும்,

Rate this:
Soundar - Chennai,இந்தியா
21-மே-201919:37:10 IST Report Abuse

SoundarOpposition parties do not have any good intention except to protect the looted public resources and loot further. God Almighty is not on their side, they will be running out on 23rd March.

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X