பதிவு செய்த நாள் :
'டிவி' செய்தி யால் தூக்கம் போச்சு:
கர்நாடக முதல்வர் குமாரசாமி புலம்பல்

பெங்களூரு:''செய்தி சேனல்கள், அரசியல்வாதிகளை தொடர்ந்து அவமானப் படுத்துகின்றன; அவற்றை கட்டுப்படுத்த, சட்டம் இயற்ற வேண்டியது அவசியம்,'' என, கர்நாடக முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான, குமாரசாமி தெரிவித்தார்.

டி.வி.,செய்தி,குமாரசாமி,புலம்பல்


கர்நாடகாவில், முதல்வர், குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மைசூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், முதல்வர் குமாரசாமி பேசியதாவது:'டிவி சேனல்'கள்,

அரசியல்வாதிகளை, தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றன; எங்களை மிகவும் சிறுமைப்படுத்திகாட்டுகின்றன.

அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எவ்வளவு கேலி செய்தாலும், பொருட்படுத்தமாட்டார்கள் என நினைக்கிறீர்களா? நாங்கள் உங்களுக்கு, 'கார்ட்டூன்' கதாபாத்திரங்களை போல தெரிகிறோமா?எதற்கெடுத் தாலும் எங்களை கேலி செய்ய, உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? யாருக்கு சாதகமாக செயல்பட, இதையெல்லாம் செய்கிறீர்கள்? 'டிவி சேனல்'களின் இந்த போக்கை கட்டுப்படுத்த, சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ம.ஜ.த., - காங்., கூட்டணி ஆட்சி, உறுதியாக உள்ளது. அவ்வளவு எளிதில் அதைகலைத்துவிட முடியாது. லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின்னும், இந்த கூட்டணி தொடரும். மக்களின் ஆதரவால் தான், நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்;

Advertisement

ஊடகத்தின் ஆதரவால் அல்ல. எனவே, அவர்கள் சொல்வதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.

'டிவி சேனல்'களில் ஒளிபரப்பாகும் செய்தி கள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்தால், என் துாக்கம் கெடுவது தான் மிச்சம்.எதிர்க்கட்சியினர் கோவிலுக்கு சென்றால், தேர்தல் பயம் என்று விமர்சிக்கும், 'டிவி'க்கள், பிரதமர் மோடி கோவிலுக்கு செல்வது, தேர்தல் முடிவுகளுக்காக அல்ல என்கிறது; பின், எதற்காக அவர் தியானம் செய்தார்? இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (17+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-மே-201920:19:13 IST Report Abuse

Natarajan Ramanathanஉனக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரணை ஏதாவது இருந்தால் இப்படி ஒப்பாரி வைக்காமல் ஓடிப்போய்விடு.

Rate this:
Soundar - Chennai,இந்தியா
21-மே-201919:41:19 IST Report Abuse

SoundarHope Karnataka will get a CM who is interested in the welfare of common people, after 23rd May.

Rate this:
Gopi - Chennai,இந்தியா
21-மே-201918:23:31 IST Report Abuse

Gopiஉங்கள் மானத்தை நீங்களே கெடுத்து கொள்கிறீர்கள். அரசியல் என்பதே விமர்சனத்திற்கு உரியது. அதில் இருப்போரை மக்களும், ஊடகங்களும் அவர்களின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் தவறொன்றும் இல்லை. உங்களையே எடுத்து கொள்ளுங்கள் நீங்கள் குட்டி ராதிகாவுக்கு ஒரு டிவி சேனலையே பரிசாக வழங்கி உள்ளீர்கள். உங்களால் காவேரி ஆறு ஓடும் நான்கு கிலோமெர்ட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள ஒரு விவசாயியின் தற்கொலையை தடுக்க முடியவில்லை. அல்லது அவர்களை அரவணைக்கும் படியான திட்டங்களை தீட்டுவதில்லை. இதற்கான அதிகாரம் உங்களிடம் உள்ளது. இதுதான் அரசனுக்கும் ஆண்டிக்கு உள்ள வித்தியாசம் . நீங்கள் சட்டமன்றத்தில் அழுகுறீர்கள், உங்கள் தந்தை தேவகவுடா பாராளுமன்றத்தில் ராகுலுடன் ஜோடி போட்டு தூங்குகிறார். இதுதான் உங்களுக்கும் செயல்வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X