பதிவு செய்த நாள் :
கருத்து கணிப்பு,முடிவு, பா.ஜ.,கூட்டணி,உற்சாகம்!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தந்துள்ள உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில், தே.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, டில்லியில் இன்று விருந்து அளிக்கவுள்ளார். அ.தி.மு.க., சார்பில், முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்கவுள்ளனர்.
லோக்சாபாவுக்கு நடந்த ஏழு கட்ட தேர்தல்கள், நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. இதையடுத்து, பல்வேறு, 'டிவி சேனல்'கள், ஆய்வு நிறுவனங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

பெரும்பான்மை


பெரும்பாலான நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள், 'பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும். தே.ஜ., கூட்டணி, 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' என, தெரிவித்தன. மற்றொரு பக்கம், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். கருத்துக் கணிப்பு முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும், மனம் தளராமல்,

எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக, டில்லியில் முகாமிட்டுள்ளார்.

கொண்டாட்டம்


ஆனால், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான பின், டில்லியில் அரசியல் கள நிலவரமே அடியோடு மாறி விட்டது. ஆளும், தே.ஜ., கூட்டணி கட்சிகள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றன. சிவசேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள், கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை துவங்கி விட்டனர்.
கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதும், நேற்று முன்தினம் நள்ளிரவையும் கடந்து, பா.ஜ., மேலிடத் தலைவர்கள்,

டில்லியில் தீவிர ஆலோசனை நடத்தினர். இறுதியில், எந்த வாய்ப்பையும் நழுவ விடக்கூடாதென முடிவெடுக்கப்பட்டு, உடனடியாக, தே.ஜ., கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று இரவு, தே.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, டில்லியில் விருந்து அளிக்கிறார். அப்போது, அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. ஆனாலும், மத்திய அமைச்சர்கள் அனைவருக்குமே, விருந்தில் பங்கேற்க வரும்படி, பா.ஜ., தலைமை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து யார்?


கூட்டணி கட்சி என்ற அடிப்படையில், அ.தி.மு.க., சார்பில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், அமித் ஷா அளிக்கும் விருந்தில் பங்கேற்கவுள்ளனர்.சேலம் சென்றிருந்த முதல்வர், தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, நேற்று இரவு, சென்னை திரும்பினார்; இன்று காலை, டில்லி செல்ல உள்ளார்.
த.மா.கா., தலைவர் வாசன், டில்லியில் உள்ளார். பா.ம.க., சார்பில், அந்த கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி பங்கேற்கிறார். தே.மு.தி.க., உட்பட பிற கூட்டணி கட்சிகளுக்கும், விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், ஆட்சி அமைப்பதற்காக, கூட்டணி கட்சிகளிடமிருந்து, முன்கூட்டியே ஆதரவு கடிதங்கள் பெறப்படலாம் என, தெரிகிறது. மேலும், 'பெரும்பான்மைக்கு குறைவாக இடங்கள் கிடைத்தால் என்ன செய்வது; திர்க்கட்சிகளின் வியூகங்களை எப்படி முறியடிப்பது' என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (22+ 39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandi - Katumandu,நேபாளம்
21-மே-201921:25:48 IST Report Abuse

Pandi@sridar யார்ரெலாம் பாவாடை போடறாங்கனு உங்க வீட்டில கேட்ட சொல்லுவாங்க. இல்லாட்டி குமாரிகளிடம் கேட்டாலும் சொல்லலாம். இல்லை என்றால் இல்லாமலும் போலாம் உங்கள் சௌகிரியத்துக்காக.

Rate this:
rm -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201918:44:26 IST Report Abuse

rmAll exit pol opinions are used to share market trend ,so that rich and corporates do their share market business with high profit .It will artificial demand and increase value of the shares.Common people like us are discussing about exit poll. But it s a business trend by corporates.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-மே-201918:27:08 IST Report Abuse

Malick Rajaபிரியாவிடை உபரசரிப்பாக மாறவும் வாய்ப்புக்கள் அதிகம் .. அதோடு அதிமுக செல்வதால் பயனில்லை காரணம் MP.க்கள் இல்லை அதாவது வெற்றிபெற்றுவர வாய்ப்புக்கள் குறைவு .. சரி போகட்டும்

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X