அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு இ.பி.எஸ்.,

ஓமலுார்,:''தேர்தலுக்கு பின் வெளியாகியிருப்பது, கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு,'' என முதல்வர், இ.பி.எஸ்., கூறினார்.

EPS,இ.பி.எஸ்.,கருத்து கணிப்பு,கருத்து திணிப்பு,


சென்னையில் இருந்து, விமானம் மூலம் நேற்று சேலம் வந்த, முதல்வர், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:தேர்தலுக்கு பின் வெளியாகியிருப்பது, கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு. கடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க., மூன்று இடங்கள் மட்டும் வெற்றி பெறும் என, கருத்து கணிப்பு வெளியானது.



விவசாயிகள் ஒத்துழைப்பு


ஆனால், 10 இடங்களில், நாங்கள் வெற்றி பெற்றோம். அதே நிலைதான் இப்போதும். தமிழகத்தை பொறுத்தவரை, லோக்சபா மற்றும் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்.'ஹைட்ரோ கார்பன்' திட்டம் போல், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய எந்த திட்டத்தையும், அ.தி.மு.க., அனுமதிக்காது.

எட்டு வழிச்சாலை என்பது மிகவும் அவசியம். அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்ப, சாலை வசதிகளை அமைக்க வேண்டும். தற்போது, உயிர்பலிகள் ஏற்படுவதை குறைக்கவும், தொழில் வளம்பெருகவும், எரிபொருள் சேமிக்கவும் சாலை வசதி தேவை. அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.பருவமழை பொய்த்ததால், வறட்சி ஏற்பட்டுள்ளது.

Advertisement

தேர்தலுக்கு முன்பாகவே, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி, அதற்கு தேவையான நிதியை ஒதுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில், அந்தந்த கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏழு பேர் விடுதலையாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான், தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பியுள்ளோம். அவர் தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மே-201915:55:30 IST Report Abuse

Endrum Indianநான் தோல்வியுறுவது போல காண்பித்தல் அது கருத்துத்திணிப்பு, நான் வெற்றியுர்வது போல காண்பித்தல் அது சரியான கருத்து???போங்க போங்க கேடு கெட்ட அரசியல்வாதிகளே???

Rate this:
Suri - Chennai,இந்தியா
21-மே-201913:38:41 IST Report Abuse

Suriஇந்த கருத்து திணிப்பு கருத்து தமிழகத்துக்கு மட்டுமா இல்லை மொத்த இந்தியாவுக்கும், EPS அவர்களே?? பார்த்து.. உங்கள் குடுமி மிக பலமாக பீ ஜெ பீ கையில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

Rate this:
burkit shahul - mangaf,குவைத்
21-மே-201910:54:41 IST Report Abuse

burkit shahulஅப்படி என்றால் உங்களின் கூற்றுப்படி மத்தியில் பிஜேபி கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் எனபதுவும் ஒருவிகிதமான கருத்து திணிப்புதானே முதல்வர் அவர்களே

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X