அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அறுவடை நாளில் கவனம் தேவை! : ஸ்டாலின்

சென்னை : 'வெற்றியை அறுவடை செய்யும் நாளான, 23ல், ஓட்டு எண்ணும் மையங்களில், அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்' என, கட்சியினருக்கு, தி.மு.க., தலைவர்,ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

dmk,stalin,அறுவடை நாள்,கவனம் தேவை,ஸ்டாலின்,அறிக்கை


அவரது அறிக்கை:தமிழக மக்கள், இரண்டு ஆட்சிகளை மாற்றுவதற்கான தீர்ப்புகளை எழுதி உள்ளனர். அதை எப்படி திருத்தி எழுதலாம் என, ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதை முறியடிக்க வேண்டிய கடமை, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை நாளில், தி.மு.க., முகவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன், மையங்களில் இருக்க வேண்டும்; காலதாமதம் என்பதே கூடாது. ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள், முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.குறிப்பாக, கோவை, ராமநாதபுரம், கரூர், தேனி ஆகிய நான்கு தொகுதிகளிலும்,

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற, எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள், அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, தி.மு.க., முகவர்களும், மாவட்ட செயலர்களும், வேட்பாளர்களும், மிகவும் விழிப்புடன் இருந்து,ஓட்டு எண்ணிக்கை நிறைவடையும் வரை, மோசடித்தனம் நடைபெறாத வகையில், கவனம் செலுத்த வேண்டும். வெற்றியை அறுவடை செய்யும் நாளான, 23ல், ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள கட்சி நிர்வாகிகள், அதிக கவனத்துடன் செயல்படவேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசில் பங்கு:


''மத்திய அமைச்சரவையில், அங்கம் வகிப்பது குறித்து, வரும், 23ம் தேதிக்கு பின் தெரிவிக்கப்படும்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறினார்.அவரது பேட்டி:தமிழகத்தில், தி.மு.க., பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும். கருத்துக் கணிப்புகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும்,அதை பொருட்படுத்துவதில்லை. வரும், 23ம் தேதி, மக்களின் தீர்ப்பு தெரியும்.அன்றைய தினம், டில்லியில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என, யார் சொன்னது?

Advertisement

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின் தான், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.மத்திய அமைச்சரவையில், தி.மு.க., அங்கம்வகிப்பது குறித்து, 23ம் தேதிக்கு பின் தெரிவிக்கப்படும். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

ரூ.2,000 நகல் வழங்கியவர் மீது வழக்கு


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்கு, நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, க.பரமத்தி ஒன்றிய, தி.மு.க., பொருளாளர் ஜெகநாதன், 45; கார்வழி பகுதியில், வாக்காளர்களுக்கு, 2,000 ரூபாயின் ஜெராக்ஸ் பிரதியை வழங்கியதாக, பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, சுயேச்சை வேட்பாளர் ஜோதி சுதர்சனம், 35, கொடுத்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார், ஜெகநாதன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundar - Chennai,இந்தியா
21-மே-201919:44:11 IST Report Abuse

SoundarHis wishes will not fulfilled. God Almighty will not allow to loot Tamil Nadu further, in fact all looted public money from the dravidian parties will find their place in government exchequer within next three years.

Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
21-மே-201916:41:49 IST Report Abuse

Ambika. Kஅப்பாவுக்கு தப்பாத புள்ளை. எங்கும் அறுவடை எதிலும் அறுவடை

Rate this:
g.selvaraju - ambattur,இந்தியா
21-மே-201913:09:31 IST Report Abuse

g.selvarajuநேற்று தந்தி டிவி கணிப்புப்படி வெளியிட்ட 11 தொகுதிகளில் 8 - ல் அதிமுக வெற்றிபெறும் என சொல்கிறது. அதுவும் வட தமிழ் நாட்டில் உள்ள திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், பூந்தமல்லி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அமோக வெற்றி. இன்னும் அறிவிக்கப்படாத அரூர், ஆம்பூர் மற்றும் சூலூர் நிச்சயம் அதிமுக வெற்றி பெரும். பாமகவை சேர்த்ததால் கிடைக்கப்போகும் தொகுதி 6 அல்லது 7 . இன்னும் இரண்டு ஆண்டுக்கு அதிமுகவை அசைக்க முடியாது. ஸ்டாலின் அவருடைய தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்வாரா?

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X