கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கமலுக்கு நிபந்தனை முன்ஜாமின்:
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் நாதுராம் கோட்சே' என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், ம.நீ.மை., தலைவர் கமலுக்கு முன்ஜாமின் அனுமதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அவர் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய நிபந்தனை விதித்தது. இதனால், கைதில் இருந்து அவர் தப்பியுள்ளார்.

சிறைவாசம்,தப்பினார்,கமல்


மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், மே, 12ல் அரவக்குறிச்சி பிரசாரத்தில், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்றார்.மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக, அரவக்குறிச்சி போலீசில், கமல் மீது வழக்குப் பதியப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கமல் தாக்கல் செய்த மனு: 'காந்தியை ஏன் கொன்றேன்' என்ற புத்தகத்தில், 'ஹிந்துக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திதான் காரணம்' என, நாதுராம் கோட்சே தெரிவித்துள்ளார். நான், நாதுராம் கேட்சே பற்றிதான் பேசினேன். ஹிந்துக்களுக்கு எதிராக பேசவில்லை.

என் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. என் நாக்கை துண்டிக்க வேண்டும் என, மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். எனக்கு அச்சுறுத்தல் உள்ளது.

முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். மே, 16ல், நீதிபதி, பி.புகழேந்தி முன்னிலையில் வாதங்கள் நடந்து, தீர்ப்பை,தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

நீதிபதி, பி.புகழேந்தி நேற்று பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'தன் பேச்சில் உள்ளதற்கும்,புகாரில் உள்ளதற்கும் மாறுபாடு உள்ளது. தீவிரவாதி, பயங்கரவாதி என்பதற்கும் வேறுபாடு உள்ளது. மனுதாரர் ஒருமுறை பேசியதை மீண்டும் மீண்டும் ஊடகங்கள் கூறுகின்றன.

'இதில் ஊடகங்களின் செயல்பாடும் வழக்குத் தொடரக்கூடிய ஒன்றுதான். கனிமவளங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும். உள்ளூர் தொழில்களை மேம்படுத்த வேண்டும் என, மனுதாரர் பேசியதை ஊடகங்கள் விவாதிக்கவில்லை' என்கிறார்.

வரையறை கூடாது


ஒருவரை மதம், ஜாதி, இனம், பிறந்த இடம், மொழி அடிப்படையில் அடிப்படைவாதி, தீவிரவாதி அல்லது பயங்கரவாதி என வரையறுக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, மக்களிடம் வெறுப்புணர்வை உண்டாக்கும். ஒருவர் ஒழுக்கம் தவறிய செயல்பாட்டால் தான், கிரிமினலாக மாறுகிறார்.

கூட்டத்தில், பார்வையாளர்கள் மற்றும் அதன் சூழ்நிலையை ஆராய்ந்து, தெளிவாக பேச வேண்டும். மனுதாரர் பேச்சு குறித்து எதிர்ப்பு எழுந்ததும், வரலாற்றில் நடந்ததை பேசியதாக, தன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சம்பவமாக இருந்தாலும், அதைசூழ்நிலை கருதி, முறையாக யார் உள்ளத்தையும் புண்படுத்தாத வகையில் கூற வேண்டும்.

Advertisement

வெறுப்புணர்வு பேச்சு


சமீபகாலமாக, வெறுப்புணர்வுடன் பேசுவது பொதுவான விவகாரமாகி விட்டது. பழநி முருகன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், ஒரு பெண் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். கிருஷ்ணரை பற்றி ஒரு தலைவர் பேசியது மற்றும் ஈ.வெ.ரா., சிலையை தகர்ப்பது பற்றி மற்றொரு தலைவர் பேசியது சர்ச்சையானது. இதுபோன்ற வெறுப்புணர்வு வகையிலான பேச்சுகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றன. விவாதம் நடத்துகின்றன.

பொதுக்கூட்ட பேச்சுகளால் ஏற்பட்ட பல விளைவுகளை, நம் நாடு ஏற்கனவே சந்தித்ததற்கு சாட்சியங்கள் உள்ளன. அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனுதாரர், பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர். தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளன. இவற்றை பரிசீலித்து, மனுதாரருக்கு முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.

மனுதாரர், 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தனித்தனியே இருநபர் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.கமல் வழக்கறிஞர், 'கீழமை நீதிமன்றத்தில் ஆஜராக கூடுதல் அவகாசம் தேவை' என்றார். நீதிபதி, 'வழக்கமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து விட்டது' என, அதை நிராகரித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-201920:14:33 IST Report Abuse

சேகர்உன்னால மொத்த ஹிந்து மதத்துக்கே அச்சுறுத்தல் இருக்கு.

Rate this:
n Subramanian - palakkad,இந்தியா
21-மே-201919:47:59 IST Report Abuse

n SubramanianNalla oru experience kamalukku kidaithu vittathu. Inimelavathu purinthu pesa palakinal nallathu

Rate this:
Sivak - Chennai,இந்தியா
21-மே-201918:37:28 IST Report Abuse

Sivakஎல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை ... ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறரர்களே... அது இந்த கமல்க்கு தெரியும் இல்லை ... அத சொல்ல வேண்டியது தானே ...

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X