ஏழை மாணவர்கள் கல்வி கடன்: தொழில் அதிபர் அதிரடி அறிவிப்பு

Updated : மே 21, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 ஏழை மாணவர்கள் கல்வி கடன்: தொழில் அதிபர் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்:அமெரிக்காவின், 396 மாணவர்களின், 280 கோடி ரூபாய் கல்விக் கடனை, தானே ஏற்பதாக, தொழிலதிபர் அறிவித்தது, மாணவர்களை மகிழ்ச்சிஅடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின், ஜார்ஜியா மாகாணம், அட்லான்டாவில் உள்ளது, மோர்ஹவுஸ் கல்லூரி. தனியார் கல்லுாரியான இது, கறுப்பு இன மாணவர்களுக்காகவே நடத்தப்படுகிறது. இந்த கல்லுாரியில் பட்டமளிப்பு விழா, சமீபத்தில் நடந்தது.இதில், கல்லுாரியின் முன்னாள் மாணவரும், 'விஸ்டா ஈகுவிட்டி பார்ட்னர்ஸ்' என்ற, முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளருமான, ராபர்ட் ஸ்மித், 56, பங்கேற்றார். இவரது சொத்து மதிப்பு, 3,500 கோடி ரூபாய். அமெரிக்காவில் கறுப்பு இன மக்களில், இவர் தான் பெரும் பணக்காரர்.
இந்நிலையில், கல்லுாரி யில் பட்டமளிப்பு உரையாற்றிய ஸ்மித் கூறுகையில், ''இங்கு பட்டம் பெறும், 396 மாணவர்களின் கல்விக் கடன் முழுவதையும், நான் ஏற்கிறேன்,'' என்றார்.

இதை கேட்ட மாணவர்களும், பெற்றோரும், மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர். அனைவரும் எழுந்து நின்று, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், கைகளை தட்டினர்.
பட்டம் பெற்ற, 396 மாணவர்களின் மொத்த கல்விக் கடன், 280 கோடி ரூபாய்.ஸ்மித் தொடர்ந்து பேசுகையில், ''இந்த கல்லுாரியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், ஏழைகள் என, எனக்கு தெரியும். நானும் இந்த கல்லுாரியில் படித்தவன். மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, இந்த உதவியை செய்கிறேன்,'' என்றார்.

இது குறித்து, கல்லுாரி யின் தலைவர், டேவிட் தாமஸ் கூறுகையில், ''நினைத்து பார்க்க முடியாத பரிசை, ஸ்மித் அறிவித்துள்ளார். ஏழை மாணவர்களின் வாழ்க்கையில், ஸ்மித்தின் அறிவிப்பு, பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - trichy,இந்தியா
25-மே-201917:43:24 IST Report Abuse
sri கிட்டத்தட்ட 80 லச்சம் கடன் வைத்துப்படிப்பவர்கள் ஏழைகளா
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
21-மே-201919:09:56 IST Report Abuse
Snake Babu மாணவர்களுக்கு வாழ்த்துக்கள், தொழிலதிபருக்கு நன்றிகள் பல, நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
abhinandan jain - chennai,இந்தியா
21-மே-201917:23:42 IST Report Abuse
abhinandan jain ஏழை களும் படிக்கவேண்டும் thanks to mr.smit.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X