பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புற்றுநோய் மருந்து விலை 87 சதவீதம் குறைப்பு:
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செலவு குறையும்

புற்றுநோய் சிகிச்சைக்கான முக்கிய மருந்துகளில், ஒன்பது மருந்துகளின் சில்லரை விலை, 87 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. 'இது, புற்று நோயாளிகளின் சிகிச்சை செலவை குறைக்கும்' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைகிறது,புற்றுநோய்,சிகிச்சை,செலவு


சமூகத்தின் அனைத்து தட்டு மக்களையும், புற்றுநோய் பாரபட்சமின்றி பாதித்து வருகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் புற்றுநோய்க்கு, பெரும்பாலும், 'கீமோதெரபி' மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சிகிச்சைக்கு, லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும்.

மத்திய வேதித்துறை அமைச்சகத்தின், என்.பி.பி.ஏ., எனும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க, நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மார்ச்சில், புற்று நோய்க்கான முக்கிய மருந்துகளின் விலை, 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. இந்த உத்தரவின் மூலம், 390 நிறுவனங்கள், தங்கள் மருந்துகளின் விலையை குறைத்தன.

பொது மருந்து


தற்போது, இரண்டாவது முறையாக, விலைகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், விலை குறைக்கப்பட்ட, ஒன்பது மருந்துகளும், புற்றுநோய் சிகிச்சைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படுபவை. நுரையீரல் புற்றுநோய்க்கு, 'கீமோதெரபி' சிகிச்சைக்கு பயன்படும் ஊசி மருந்தான, 'பிமெட்ரக்ஸ்டு' - 500 எம்.ஜி., விலை, 22 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. அதே மருந்து, 100 எம்.ஜி., விலை, 7,700ல் இருந்து, 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

'கீமோதெரபிக்கு' பயன்படும் மற்றொரு ஊசி மருந்தான, 'எபிருபிசின்' - 50 எம்.ஜி.,யின் விலை, 2,662ல் இருந்து, 960 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 10 எம்.ஜி., மருந்தின் விலை, 561ல் இருந்து, 277 ரூபாயாகவும், 'எர்லோடினிப்' - 150 எம்.ஜி., 10 மாத்திரைகள், 8,800ல் இருந்து, 2,400 ரூபாயாகவும், 100 எம்.ஜி., மாத்திரை, 6,600ல் இருந்து, 1,840 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

'எவரோலிமஸ்' - 0.5 எம்.ஜி., 1,452 ரூபாயில் இருந்து, 726 ரூபாய், 0.25 எம்.ஜி., 739 ரூபாயில் இருந்து, 406 ரூபாயாகவும், ஹார்மோனல் தெரபி ஊசி மருந்தான, 'லியூப்ரோலைட் அஸிடேட்' 3,990 ரூபாயில் இருந்து, 2,650 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

Advertisement

அறிவுறுத்தல்


விலை குறைப்பு குறித்து, முன்னணி மருந்து நிறுவனங்கள் எதுவும் கூறாத நிலையில், இம்மருந்துகளின் உற்பத்தியை குறைக்கக் கூடாது என, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.'மிகவும் செலவுமிக்கதாக இருந்து வந்த, புற்று நோய் சிகிச்சை, இனி மலிவான சிகிச்சையாக மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது' என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சேலம் புற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் சிவகுமார் கூறியதாவது: புற்றுநோய் பாதிப்புகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் சிகிச்சை செலவுகளால், ஏழை நோயாளிகள் திண்டாடினர். புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பால், ஒரு முறை சிகிச்சை எடுத்த செலவில், ஆறு முறை சிகிச்சை எடுக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைப்பு வரவேற்கத்தக்கது. இவ்விலை குறைப்பு, நிச்சயம் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201915:24:26 IST Report Abuse

DiyaBusiness can be done with alive customers alone. Hence, balance is required across various segments from food to medicine. Regarding smoking, it not only destroys them, it destroys their own family, neighbors including children and pregnant women too. Smoking is more evil than drinking alcohol. Those who smoke inside the house with close neighborhood should be cursed to death. There is no smoking zone only in public places including workplaces, hospitals, etc. But, what about the ones who smoke where the houses are built so close in India?

Rate this:
Girija - Chennai,இந்தியா
21-மே-201914:53:53 IST Report Abuse

Girijaபோதாது முற்றிலும் இலவசமாக்க வேண்டும் .

Rate this:
Giri - nagercoil,இந்தியா
21-மே-201909:00:43 IST Report Abuse

Giri90% vilai kuraippu raal ithuvarai 90% profit earned by the pharma companies.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X