ஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (16)
Advertisement
ஈரான்,இறுதிக்காலம்,டிரம்ப்,ஆவேசம்

வாஷிங்டன்,:''அமெரிக்காவுடன் சண்டையிட நினைத்தால், அதுவே ஈரானின் முடிவாக இருக்கும்,''' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக, டொலான்டு டிரம்ப் பதவியேற்ற பின், மத்திய கிழக்கு நாடான, ஈரானுக்கு எதிராக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், வளைகுடா கடல் பகுதிகளில், அமெரிக்க போர் கப்பல்களை, அதிபர் டிரம்ப் நிறுத்தி உள்ளார்.உலகின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளுக்கு பயணம் செய்ய, வளைகுடாவின் வான்வழி, முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே, அவ்வழித்தடங்களில் பயணம் செய்யும் விமானங்களுக்கு, அமெரிக்கா, எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கு பதிலடியாக, 'அணுசக்தி ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடிக்கப் போவதில்லை' என, ஈரானும் மிரட்டல் விடுத்துள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது, ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே, போர் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:எங்களுடன் சண்டையிட நினைத்தால், அதுவே ஈரானின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201917:00:33 IST Report Abuse
Arul Krish North Korea can help
Rate this:
Share this comment
Cancel
21-மே-201911:29:07 IST Report Abuse
ARUN.POINT.BLANK Dear Trump you do you know the rest of the world is getting United !! you cannot do the same what you guys did to Iraq. it is interdependent world dude 🤗
Rate this:
Share this comment
Cancel
21-மே-201911:12:21 IST Report Abuse
DNS.Udpm துருக்கி மீது அமெரிக்கா போர் தொடுக்கும்..இன்ஸ்தான்புல்லை கைப்பற்றும்...அமெரிக்கா அழிவு ஆரம்பமாகும் முதல் புள்ளி அதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X