பதிவு செய்த நாள் :
ம.பி., காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி:
பலத்தை நிரூபிக்க பா.ஜ., போர்க்கொடி


போபால்:இன்னும் இரண்டு நாட்களில் லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில், முதல்வர்,கமல்நாத் தலைமையிலான, காங்கிரஸ்அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கமல்நாத் அரசுக்கு நெருக்கடிபெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி, கவர்னருக்கு கடிதம் எழுதவுள்ளதாக, எதிர்க்கட்சியான, பா.ஜ., போர்க்கொடி துாக்கியுள்ளது.

உத்தரவுமத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 230தொகுதிகளில், காங்., 114ல் வென்றது.பா.ஜ., 109; பகுஜன் சமாஜ், இரண்டு; சமாஜ்வாதி மற்றும் சுயேச்சை தலா, ஒரு தொகுதியில் வென்றன.
பெரும்பான்மைக்கு இரண்டு பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள், காங்.,குக்குஆதரவுதெரிவித்துள்ளன.தற்போது, லோக்சபாவுக்கு தேர்தல் நடந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், மத்தியில் மீண்டும், பா.ஜ., அரசு அமையும் என்று தெரியவந்துள்ளது.

மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள, 29 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய பிரதேச சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான, கோபால் பார்கவாகூறியுள்ளதாவது:முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு, முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. விவசாயிகளுக்கான கடன் ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறது; ஆனால், தகவல் தர மறுக்கிறது.அதனால், முக்கிய பிரச்னைகள் குறித்தும், தன் அரசின் பலத்தை நிரூபிக்கவும், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி, கமல்நாத்துக்கு உத்தரவிடக் கோரி, கவர்னர், ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுத உள்ளோம்.முக்கியமான பிரச்னைகளில், சட்டசபையில் ஓட்டெடுப்புநடத்த வேண்டும் என்றும், வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.சமீப காலமாகவே, காங்கிரசுக்கும், கூட்டணி

Advertisement

கட்சியான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

ஆதரவு வாபஸ்சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தங்களுக்கு தொகுதி ஒதுக்குவதில், வேண்டு மென்றே காங்கிரஸ்தாமதித்ததாக, மாயாவதி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும், காங்கிரஸ் ஈடுபட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாயாவதி, 'காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற போக்கை தொடர்ந்தால், அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவோம்' என, எச்சரித்திருந்தார்.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியான, பா.ஜ., களத்தில் இறங்கியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் கமல்நாத்தை வலியுறுத்தி உள்ளது.Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundar - Chennai,இந்தியா
21-மே-201919:40:30 IST Report Abuse

SoundarHope MP will get a CM who is interested in the welfare of common people, after 23rd May.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மே-201915:50:06 IST Report Abuse

Endrum Indianஅப்போ மத்தியப்பிரதேசம், கர்நாடகா என்று ரெண்டுமே ஊத்திக்குமா????அப்போ 2018 ல் நடந்த தேர்தலில் பி.ஜெ.பி ஊத்திக்கிச்சி என்று காங்கிரஸ்,தி.மு.க., பகுஜன்??? முதல் அவன் அவன் படு பயங்கரமாக ஊளையிட்டானே

Rate this:
Divahar - tirunelveli,இந்தியா
21-மே-201915:04:19 IST Report Abuse

Divaharஜனநாயக வியாபாரம் தான் நாட்டை கெடுகிறது , பாதிக்கிறது

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X