சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : மே 21, 2019
Advertisement

தனியார் செக்யூரிட்டி மர்ம சாவு
கூடுவாஞ்சேரி: விழுப்புரம், அரசலாபுரத்தைச் சேர்ந்தவர், வீராசாமி மகன் கார்த்திகேயன், 38. இவர், கூடுவாஞ்சேரி அடுத்த, தைலாவரத்தில், தனியார் பல்கலைக்கழக செக்யூரிட்டியாக பணிபுரிந்தார். இவருக்கு, மனைவி, மகள் உள்ளனர்.இந்நிலையில், பொத்தேரியில் உள்ள தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்கம்பி வேலியில், தலை மாட்டியபடி, அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.தகவலறிந்து வந்த போலீசார், நேற்று முன்தினம், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

டூ- - வீலர் டயர் வெடித்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி: சிதம்பரத்தைச் சேர்ந்த சிவராஜ், 28, அவர் நண்பர் மணிவண்ணன், 27, ஆகியோர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஒரகடத்தில் உள்ள, தனியார் நிறுவனத்திற்கு நேர்முக தேர்வுக்கு வந்தனர்.அதை முடித்து, நேற்று முன்தினம், இருவரும், பூந்தமல்லியில் இருந்து, 'ஹீரோ' இரு சக்கர வாகனத்தில், சிதம்பரத்திற்கு சென்றனர்.வண்டலுார் மேம்பாலம் அருகில், வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்ததில், வாகனம் நிலை தடுமாறி, இருவரும் விழுந்தனர்.சம்பவ இடத்திலேயே சிவராஜ் இறந்தார். மணிவண்ணன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, சக்திநகர் ஜெயலட்சுமி தெருவைச் சேர்ந்தவர், அருண்குமார், 32. வெளியூருக்கு, குடும்பத்துடன் சென்ற இவர், நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 5 சவரன் நகை திருடுபோனதாக, அருண்குமார் அளித்த புகாரை, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஷேர் ஆட்டோவில் இருந்து விழுந்தவர் பலி
ஊத்துக்கோட்டை: பொன்னேரி தாலுகா, கும்மனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதர், 36. இவர், வேலை நிமித்தமாக, ஜனப்பன்சத்திரம் சென்று, அங்கிருந்து பதிவெண் இல்லாத ஷேர் ஆட்டோவில், பெருமுடிவாக்கம் சென்றார்.ஆட்டோ வேகமாக சென்றதில், ஆட்டோவில் இருந்து, பாதர் விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், பாடியநல்லுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வாலிபர் தற்கொலை
ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் மணிகண்டன், 29. திருமணம் ஆகவில்லை; வேலையும் இல்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், வயல்வெளியில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.அவரது தந்தை வெங்கடேசன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவர் இறந்தார். இது குறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இளம்பெண் மாயம்
ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் வடிவம்மாள், 22. கடந்த, 5ம் தேதி, வீட்டில் இருந்த அவர், ஊத்துக்கோட்டையில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, சேகர், ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

லாரி மோதி முதியவர் பலி
கூடுவாஞ்சேரி: வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த, மாக்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 54. இவர், கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகில், 18ம் தேதி, சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த மினி லாரி மோதி, படுகாயமடைந்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வம், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.

வாலிபர் தீக்குளித்து தற்கொலை
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, கன்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வஜ்ரவேல் மகன் புருஷோத்தமன், 42. கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி பிரிந்து சென்றார்.தனியாக வசித்த இவர், நேற்று முன்தினம், கதவை தாழிட்டு, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்து இறந்தார்.தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், வீட்டின் கதவை உடைத்து, சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X