நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார்: கமல்நாத்

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார்: கமல்நாத்

போபால்: சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார் என மத்திய பிரதேச காங். முதல்வர் கமல்நாத் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங். 114 இடங்களை பிடித்தது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்கள் அகிலேஷின் சமாஜ்வாதி உறுப்பினர் ஒருவர் ஆதரவுடன் கமல்நாத் தலைமையிலான காங். கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜ. 109 இடங்களில் வென்றது. தவிர 4 சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர்.





இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா கூறியது, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு, மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. விவசாயிகளுக்கான கடன் ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறது; ஆனால், தகவல் தர மறுக்கிறது. நிதி தொடர்பான கோரிக்கைகள் குறித்து எழுப்பப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் ஆட்சி கவிழும் என்றார்.
இது குறித்து முதல்வர் கமல்நாத் கூறியது, மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் எங்களுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கிறது. ஆட்சியை கலைக்க பா.ஜ., நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் நாங்கள் 4 முறையாவது பெரும்பான்மையை நிரூபித்திருப்போம். வாக்கெடுப்பு நடந்தால் அதில் காங். வெற்றி பெறும் என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-மே-201914:01:37 IST Report Abuse
ஆரூர் ரங் தலைக்குமேலே தண்ணி இனிமே
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-மே-201910:16:09 IST Report Abuse
அசோக்ராஜ் அதான் கேப்டன் அம்ரிந்தர் சிங் சொல்லிட்டாரே. இந்த தேர்தலில் தோற்றால் கான்க்ராஸ் முதல்வர்கள் ராஜினாமா செய்யணும்னு.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
21-மே-201910:13:13 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> cm குர்ஸி என்ன பிளாஸ்டிக் சேரா திண்டாடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X