சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை கண்டித்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

Added : மே 21, 2019
Advertisement

உடுமலை:உடுமலையில், போலீசாரைக்கண்டித்து, அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை, ஜிலேபி நாயக்கன்பாளையம் கிராம உதவியாளர் செல்வராஜ், முக்கோணத்திலுள்ள அவரது வீட்டிருக்கு அருகே சென்று தாக்கியதோடு, வழக்கும் பதிவு செய்த, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், தாலுகா அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் ராஜ சேகர், மாவட்டச் செயலாளர் அம்சராஜ், வட்டக்கிளை தலைவர் பாலசுப்ரமணியம், கிராம உதவியாளர் சங்க வட்ட கிளைத் தலைவர் திலீப், செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு ஊழியர்கள், டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவாக அறிவித்திருந்தனர். தேர்தல் நடத்தை விதி முறைகளை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டு, டி.எஸ்.பி., அலுவலக ரோடு முழுவதும் அடைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X