பொது செய்தி

தமிழ்நாடு

போஸ்ட் ஆபீஸ்-மஞ்சக்குப்பம் வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி திடீர் ரத்து

Added : மே 21, 2019
Advertisement
 போஸ்ட் ஆபீஸ்-மஞ்சக்குப்பம் வடிகால்  வாய்க்கால் கட்டுமான பணி திடீர் ரத்து

கடலுார்: கடலுார் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (கிழக்கு கடற்கரை சாலை) கட்டப்பட்டு வந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி மஞ்சக்குப்பம் பகுதியில் திடீரென ரத்து செய்யப்பட்டது.கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கடலுார் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழைநீர் வடிய முடியாமல் சாலையிலேயே தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் (நேதாஜி சாலையில்) 15 கோடி ரூபாய் மதிப்பில், மோகினி பாலம் முதல் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை, சாலை போடவும், சாலையின் இரு புறங்களிலும் கால்வாய் கட்டுவதற்காக, 15 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. முதல்கட்டமாக மோகினி பாலத்தில் இருந்து பணிகள் துவக்கப்பட்டு, போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் வரை கட்டப்பட்டுள்ளன. அதேபோல், 2 லேயர் தார் சாலைகளும் போடப்பட்டுள்ளன. ஆனால் போஸ்ட் ஆபீசில் இருந்து மஞ்சக்குப்பம் மணிக் கூண்டு வரை, சாலையோரம் தரைமட்டத்தில் வடிகால் வாய்க்கால் போட திட்டமிடப்பட்டது. ஏற்கனவே துவங்கப்பட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. குத்துாசி குருசாமி சாலையில் உள்ள மின் கம்பங்கள் இடையூறாக இருப்பதால் வடிவாய்க்கால் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இது ஒரு புறமிருக்க, போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை, சாலை குறுகலாக இருப்பதால், மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நகராட்சி சார்பில் வாய்க்கால் கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சக்குப்பம் நடைபாதை வியாபாரிகள், மார்க்கெட் வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X