வசூலில் வாரிக்குவிக்கும் வடக்கு 'மாமூல்' அதிகாரி!

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019
Advertisement
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகரில், ஒரு அபார்ட்மென்டில் உள்ள சித்ரா வீட்டுக்கு சென்றாள் மித்ரா. நகத்தை கடித்தபடியே, டென்ஷனில் நடைபோட்டு கொண்டிருந்ததை பார்த்த மித்ரா, ''என்னக்கா... வேட்பாளரை விட, நீங்க டென்ஷனா இருக்கிறீங்க. என்ன விஷயங்க்கா?''''ஏய்... மித்து. கரெக்டா சொல்லிட்டடி. வியாழக்கிழமை வரைக்கும், என்னாலேயே முடியலை. கட்சிக்காரங்களை பத்தி சொல்லவே வேண்டியதில்லை''
 வசூலில் வாரிக்குவிக்கும் வடக்கு 'மாமூல்' அதிகாரி!

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகரில், ஒரு அபார்ட்மென்டில் உள்ள சித்ரா வீட்டுக்கு சென்றாள் மித்ரா. நகத்தை கடித்தபடியே, டென்ஷனில் நடைபோட்டு கொண்டிருந்ததை பார்த்த மித்ரா, ''என்னக்கா... வேட்பாளரை விட, நீங்க டென்ஷனா இருக்கிறீங்க. என்ன விஷயங்க்கா?''''ஏய்... மித்து. கரெக்டா சொல்லிட்டடி. வியாழக்கிழமை வரைக்கும், என்னாலேயே முடியலை. கட்சிக்காரங்களை பத்தி சொல்லவே வேண்டியதில்லை''

''இன்னும், 48 மணி நேரம்தானே. பொறுத்துக்கோங்க. ஆமாங்க்கா, ஒவ்வொரு ஏெஜன்டுக்கும், வேட்பாளர், 200 ரூபா பணம் கட்டியிருக்காங்க தெரியுமா?,''

''என்னது ஓட்டு எண்ணறதை பார்க்க போறதுக்கு, பணம் கட்டணுமா'' ஆச்சரியமாக கேட்டாள் சித்ரா.

''ஆமாங்க்கா. தேர்தல் கமிஷன் சார்பில், மூணு நேரமும் சாப்பாடு, டிபன், டீ, காபி, 'ஸ்நேக்ஸ்' கொடுத்திருவாங்க. அதுக்காக, தலைக்கு, 200 ரூபா வாங்கியிருக்காங்க...''

'ஓ... அப்டியா. அதுதானே பார்த்தேன்,'' என்ற சித்ரா, சூலுார் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விளையாண்டுச்சாம், தெரியுமா?''''உண்மைதான்கா. சூலுார் தொகுதியில ஓட்டுப்பதிவு அதிகமாகவும், 'பட்டுவாடா'தான் முக்கிய காரணம்.


தொகுதிக்குள்ளயே இருக்கற வாக்காளருக்கு, ஆளுங்கட்சிக்காரங்க, இரண்டு நாளைக்கு முன்னாடியே, 2 ஆயிரம் கொடுத்துட்டாங்க''''தொகுதியில ஓட்டு இருந்தாலும், வெளியூர்ல இருக்கற வாக்காளருக்கு, முன்னாடியே காசு கொடுக்க மறுத்துட்டாங்க; 'நீங்க ஓட்டுப்போட, 'பூத் சிலிப்' போட வாங்க, 'பூத்'துக்கு போற முன்னாடியே, பணத்தை வாங்கிக்கலாம்'னு கறாரா சொல்லிட்டாங்க; அதே மாதிரி, குடும்பத்தோட ஓட்டுப்போடப்போன வாக்காளருங்க, கை நிறைய வாங்கிட்டுத்தான் ஓட்டுப்போட்டுட்டு வந்திருக்காங்க'' என்றாள் மித்ரா.
''அதனால, முடிவை நிர்ணயிக்கறதென்னவோ, பணம்தான்...'' என்றாள் சித்ரா.''அதே மாதிரிங்க்கா... 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட கலெக்டர் ஆர்டர் போட்டார்.இதை பயன்படுத்திய ஒரு குரூப் பெட்டி, பெட்டியாக 'சரக்கு' வாங்கி, கொள்ளை லாபத்துக்கு வித்துட்டாங்க. இதுக்கு போலீசாரோட, ஆசியும் உண்டாம். இதனால, சரக்கு மொத்தமாக வாங்கின கடையில, அந்தன்னைக்கு மட்டும், 4 லட்சத்துக்கு 'சேல்ஸ்' ஆச்சாம்,''''இதையெல்லாம், யார் மாத்துவாங்கன்னு தெரியலையே,''என, மித்ரா சொல்லி கொண்டிருக்கும்போது, அவ்வழியே சென்ற பள்ளி பஸ்சை பார்த்து, ''பள்ளி வாகனங்கள் சோதனை செய்றதுலயும், புதுசா இருந்தா சலுகைதான்'' என்றாள்.''புதுசுனா மவுசு இருக்கத்தானே செய்யும்டி, மித்து!''''அதுக்குனு இப்படியாங்க்கா. சிக்கண்ணா காலேஜ் முகாமில், சில ஸ்கூல் பேர கேட்டதும், 'அவங்க புதுசா பஸ் வாங்கினாங்களே, ஓகே..! அனுப்பிச்சுடு'ன்னு சொல்லீட்டு, அடுத்த வரிசைக்கு ஆர்.டி.ஓ., சென்றார்.''அட... கொடுக்க வேண்டியதை கொடுத்து 'கரெக்ட்' பண்ணியிருப்பாங்க.
எப்படியும் வேற எதிலாவது மாட்டுவாங்க. அப்ப பார்த்துக்கலாம்,''அதற்குள் சமையலறைக்குள் நுழைந்த சித்ரா, 'பில்டர் காபி' கொடுத்தாள். அதைக்குடித்த மித்ரா, ''பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்குது,'' என்று உசிலைமணி பாணியில் சொன்னாள் மித்ரா.''ஏன்... மித்து. இந்த காங்கயம் டிராபிக் அதிகாரிய பத்தி, 'வாட்ஸ் அப்'-ல ஏதோ வந்துதாம். உனக்கு தெரியுமா?''''ஆமாங்க்கா... பைக்கில் டிரிபிள்ஸ் வந்த வாலிபர்களை பிடித்து, அதிகாரி, 'பைன்'போட்டுள்ளார். அந்தப் பணத்தை வாங்கும் போது, மூன்று பேரில் ஒருவர், தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து, சூரியக்கட்சி பிரமுகருக்கு அனுப்ப, அவர் 'பேஸ்புக்'கில் பதிவேற்ற பரபரப்பாகி விட்டது,''''அப்புறம் என்னாச்சுடி?''''சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தேடிப்பிடித்து, நடந்தை விளக்கியதால், அவர் பதிவுகளை அழித்து விட்டாராம்,''''நேர்மையான அதிகாரிகளுக்கே இந்த நிலைதான் போல. பிளாஸ்டிக் ஒழிப்புக்கு ஆதரவளிக்க வேண்டிய ஆளும் கட்சியினரே அதற்கு துணை போவது தெரியுமா?,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''எங்கீங்க்கா?''''அட... நம்ம லிங்கேஸ்வரர் ஊரில் ஒரு குடோனில், டன் கணக்கில் பாலித்தீன் கவர், பிளாஸ்டிக் டம்ளர்களை, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், பறிமுதல் செஞ்சு, 'சீல்' வச்சிட்டாங்க.
ஆனா, பிடிச்சதை திருப்பி தரச்சொல்லி, ஆளுங்கட்சி ஆட்கள் 'பிரஸ்ஸர்' கொடுக்கிறாங்களாம். இதனால, என்ன செய்வதுன்னு தெரியாம, அதிகாரிங்க கையை பிசைஞ்சிட்டிருக்காங்க. கலெக்டர் இது விஷயத்தில, தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கோணும்,''''கரெக்டா... சொன்னீங்க போங்க...!''அப்போது, டேபிள் மீதிருந்த நாளிதழை புரட்டிய சித்ரா, தேரோட்ட படங்களை பார்த்து விட்டு, ''இந்த வருஷம், ஈஸ்வரன் கோவிலுக்கு தேருக்கு வர முடியாம போச்சு,'' என்றாள்''ஏங்க்கா... எங்க போய்ட்டீங்க...'
'''வெளியூருக்கு போயிட்டு வர முடியலை. அதுசரி, தேரோட்டம் எப்படி நடந்துச்சு...''''வழக்கம்போலதான். சூப்பரா இருந்திச்சு. என்ன, கூட்டம்தான் ரொம்ப கம்மி. தேர்த்திருவிழா நடக்குறதுகூட தெரியாம, கம்பெனிக்காரங்க ரொம்ப பிஸியாவே இருந்திட்டாங்க''''இண்டஸ்ட்ரியல் ஏரியான்னா அப்படித்தான். அதனாலதான், போலீஸ் அதிகாரிங்க, திருப்பூருக்கு தேடித்தேடி வர்றாங்க. அப்படி வந்த ஒரு அதிகாரி பண்ணின வேலை தெரியுமா,''''அப்படியென்ன வேலை செஞ்சாரு?''''வடக்கு பகுதியில பொது இடத்தில் தகராறு செஞ்ச சிலரை பிடித்து கேஸ் போட்டாங்க. அவங்களை ஸ்டேஷன் ஜாமினில் ரிலீஸ் செய்ய, ஒரு பெரிய தொகை கை மாறுச்சாம். அது எவ்வளவு, யார் ஏஜன்ட்ன்னு கேட்டு, மத்த போலீஸ் மத்தியில, பட்டிமன்றமே நடக்குதாம்,''''அதுமட்டுமில்லை மித்து. அந்த 'நாயக' அதிகாரி. 'டியூட்டி'க்கு எப்ப வருவாரு, போவார்ன்னு, போலீஸ்காரங்களை விட, 'டாஸ்மாக்' 'பார்'காரங்களுக்கு, ரொம்ப நல்லாவே தெரியுது.
லாட்ஜ், பேக்கரி, டிராவல்ஸ் என, எல்லாத்தையும், தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வைக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாரு. அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சாகும்னு, இவருக்கு ஏன், புரிய மாட்டேங்குது,'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.''அக்கா... எல்லாத்துக்கு நேரம், காலம் வருமுன்னு, கிராமத்தில் சொல்லுவாங்க. அப்படி வந்துச்சுன்னா, தன்னாலே சரியாயிடுவாரு பாருங்க.
இந்த ஆதார் சென்டரில் வேலை பார்க்கிறவங்க, ஒவ்வொரு கார்டுக்கும், 50 ரூபா வரைக்கும் வசூலிக்கிறாங்களாம்,''''ஆமா.. மித்து. நானும் கேள்விப்பட்டேன். தின சம்பள அடிப்படையில, நியமிச்ச சிலர், நல்லாவே 'கல்லா' கட்டுறாங்களாம். குறிப்பா, லிங்கேஸ்வரர் ஊரில், ஆதாரில் ஒரு கரெக்ஷன் இருந்தாலும், 30லிருந்து, 50 ரூபா வரைக்கும் 'பைன்' போட்டுடறாங்களாம். அதிலும், ஒரு 'லேடி' இதில் ரொம்ப கில்லாடியாம். எல்லா தகவல் பரிமாற்றத்தையும் 'வாட்ஸ்அப்' மூலம் செஞ்சிடறாங்களாம்,''அப்போது, மித்துவின் மொபைல்போன் ஒலிக்கவே, ''ஹாய்... விஜி, எப்படியிருக்கே.
உனக்கு எப்ப போன் பண்ணாலும், 'பிஸி'யாவே இருக்குது. 'வாட்ஸ் அப் கால்' பண்ணாலும் 'பிஸி'தான். பார்த்துடி எதுவாயிருந்தாலும், ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். ஜாக்கிரதை,'' என, எச்சரிக்கை செய்து, போனை ஆப் செய்த மித்ரா, ''அக்கா... என்னை வண்டியில வீடு வரைக்கும் 'டிராப்' பண்றீங்களா?'' என்றாள்.''ஓ.கே.., மித்து, கிளம்பலாம்,'' என்றவாறு, ெஹல்மெட் சகிதம் புறப்பட்டாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X