63 மணி நேர மவுன விரதம் பிரக்யா சிங் திடீர் முடிவு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

63 மணி நேர மவுன விரதம் பிரக்யா சிங் திடீர் முடிவு

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (13)
63 மணி நேர மவுன விரதம் பிரக்யா சிங் திடீர் முடிவு

போபால்,: சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சிக்கல்களில் மாட்டிய, போபால் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளரும், பெண் சாமியாருமான, பிரக்யா சிங், மவுன விரதம் மேற்கொண்டுள்ளார்.தடைமஹாராஷ்டிர மாநிலம், மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர், பிரக்யா சிங். பெண் சாமியாரான இவர், தற்போது ஜாமினில்வந்துள்ளார். சமீபத்தில் முடிந்த லோக்சபா தேர்தலில், இவர், மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிட்டார்.தேர்தல் பிரசாரத்தின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, பிரசாரம் செய்வதற்கு, பிரக்யாவுக்கு, தேர்தல் ஆணையம், 72 மணி நேர தடை விதித்தது.மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற, நாதுராம் கோட்சேவை, தேச பக்தர் என, பிரக்யா சமீபத்தில் கூறினார். இதற்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பா.ஜ.,வும் கண்டனம் தெரிவித்தது.





சோதனை'மஹாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில், பிரக்யா பேசியதை மன்னிக்க முடியாது' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பிரக்யா சிங் கூறியிருப்பதாவது:தேர்தல் முடிந்து விட்டது. ஆத்ம பரிசோதனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. தேர்தல் பிரசாரத்தின் போது, என் பேச்சு, தேச பக்தர்கள் மனதை புண்படுத்தியிருந்தால், அதற்காக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.பொது சேவைக்கான நல்லொழுக்கத்தின்படியும், செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையிலும், 63 மணி நேர மவுன விரதமும், கடும் தவமும் இருந்து வருகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X