மீண்டும் மோடி பிரதமராவார் : ராமன் சிங்

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராமேஸ்வரம் : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்று சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் தெரிவித்திருந்தார்.லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளிவரும். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலுவிழக்கும். மோடி மீண்டும் பிரதமராவார் என்று ராமன் சிங் கூறினார். சத்தீஸ்கர்

ராமேஸ்வரம் : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்று சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் தெரிவித்திருந்தார்.



latest tamil news




லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளிவரும். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலுவிழக்கும். மோடி மீண்டும் பிரதமராவார் என்று ராமன் சிங் கூறினார். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று ( மே 20) சுவாமி தரிசனம் செய்தார். அவரை மாவட்ட பா.ஜ தலைவர் முரளீதரன் வரவேற்றார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்று கலாமின் அண்ணன் முத்துமீரா மரைக்காயர், பேரன் சேக் சலீம் ஆகியோரை சந்தித்தார். பின் நிரூபர்களிடம் ராமன் சிங் பேசியதாவது : சத்தீஸ்கர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அப்துல் கலாம். கலாம் இங்கு இல்லையென்றாலும் அவரது உறவினர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பா.ஜ.க 300 இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வந்துள்ளன.


latest tamil news




பொதுவாக கருத்து கணிப்பு தங்களுக்கு சாதமாக இருந்தால் மட்டுமே எதிர்கட்சிகள் ஏற்பர். அவர்களால் பா.ஜ.கவின் வெற்றியை தடுக்க முடியாது. சத்தீஸ்கரில் நக்சலைட் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் இனி வரும் காலத்தில் முழுவதுமாக ஒடுக்கப்படும். இவ்வாறு ராமன் சிங் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
21-மே-201908:59:44 IST Report Abuse
sundarsvpr மோடி மீண்டும் பிரதமர் பெருமிதம் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் வெளி எதிர்ப்பை விட உள் எதிர்ப்பு கிளம்பும். வெளி நாட்டு பயணங்கள் குறையும். உள்நாட்டில் விந்தியத்திற்கு தெற்கே பயணங்கள் கை கொடுக்கும் 300 இடங்கள் தாரக மந்திரம்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-மே-201907:08:36 IST Report Abuse
ஆரூர் ரங் ராமன் சிங் அல்ல. ரமண்சிங் என்பதே சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X