கராச்சி துறைமுக தாக்குதல் : திரைப்படமாக்க முடிவு

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (7)
Advertisement

இஸ்லாமாபாத் : கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளது.






இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, 1971ல், போர் ஏற்பட்டது. அப்போது, டிச., 4ல், இந்திய கடற்படை, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில், கடல் வழி தாக்குதல் நடத்தியது. கராச்சி துறைமுகத்தின் மீது நடந்த தாக்குதல் சம்பவங்கள் திரைப்படமாக்கவுள்ளது.


மூழ்கடிப்பு


இந்த தாக்குதலில், பாகிஸ்தானின், இரண்டு போர் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. துறைமுகத்தில் இருந்த எரிபொருள் கிடங்குகளுக்கு தீ வைக்கப்பட்டு, அழிக்கப்பட்டன.இந்த தாக்குதலுக்கு, 'ஆப்பரேஷன் திரிசூல்'என, பெயர் வைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் 2 போர் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. துறைமுகத்தில் இருந்த எரிபொருள் கிடங்குகளுக்கு தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலில், இந்திய தரப்புக்கு, சிறு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில், ஆண்டுதோறும், டிச., 4ல், இந்திய கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'கடற்படை தினம்' என்ற தலைப்பில், கராச்சி துறைமுக தாக்குதல் சம்பவம், திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.






கடற்படை தினம்


தினம்விளம்பர படங்கள் எடுப்பதில், மிகவும் பிரபலமான இயக்குனர், ரஜனீஷ் கய், இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை, 'டி - சீரிஸ் மற்றும் எல்லிப்சிஸ் என்டர்டைன்மென்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.இது பற்றி, அந்த நிறுவனத்தின் நிர்வாகி, பூஷண் குமார் கூறுகையில், ''கடற்படை தினம் படத்துக்கான, நடிகர் - நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில், இதற்கான படப்பிடிப்புகள் துவங்கும்,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
21-மே-201913:52:43 IST Report Abuse
M.COM.N.K.K. இந்த படத்தில் நடிக்கவேண்டியவர்கள் மக்கள் திலகம் நடிகர்திலகம் மக்கள் கலைஞர் இம்மூவரும் மிக மிக சிறப்பாக இருக்கும் என்ன செய்வது காலம் கடந்து எடுப்பது எடுபடாது
Rate this:
Share this comment
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201910:01:44 IST Report Abuse
Ram RV பழைய ரணஙகளைக் கிளராமல் இருப்பது விவேகம்.
Rate this:
Share this comment
Mohamed Malick - Dubai,இந்தியா
21-மே-201911:56:12 IST Report Abuse
Mohamed Malick யாருக்கும் ரணம் இது ......
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
21-மே-201907:12:16 IST Report Abuse
Gnanam பாகிஸ்தான் பிடியிலிருக்கும் இந்திய மண்ணை விடுவித்து அதையும் படமாக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X