பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'

Added : மே 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ஓட்டு எண்ணிக்கை, நிலவரம், சுவிதா, செயலி, கூகுள் செயலி, பதிவிறக்கம், தேர்தல் ஆணையம்

சென்னை: ஓட்டு எண்ணிக்கை அன்று நிலவரத்தை ‛சுவிதா'செயலியில் பொதுமக்கள் பார்க்கலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். லோக்சபா தேர்தலையொட்டி ‛சுவிதா'எனும் அலைபேசி செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.

இதை கூகுள் ப்ளேஸ்டாரில் பதிவிறக்கம் செய்யலாம். அதில் அலைபேசி எண்ணை பதிவு செய்யவேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (ஓ.டி.பி) எஸ்.எம்.எஸ் வரும், அதை கொடுத்து தங்கள் பெயர் மாநிலம், தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் தேர்தல் தொடர்பான விவரங்களை அறியலாம். சொந்த தொகுதி, மாநிலம் மட்டுமின்றி பிற மாநில வேட்பாளர்கள் பெறும் ஓட்டு விவரங்களையும் பார்க்க முடியும்.

ஒவ்வொரு சுற்றின் முடிவில் ஓட்டு விவரங்களை அறிய புக்மார்க் பகுதியை தேர்வு செய்யவேண்டும். பிறகு தாங்கள் தேர்வு செய்த மாநிலம், தொகுதியில் வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகள் விவரம் எஸ்.எம்.எஸ்.,சில் வரும். ஓட்டு எண்ணிக்கையன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு சுற்றின் ஓட்டுக்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணைய பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அவை மூலம் ‛சுவிதா' செயலிக்கு உடனுக்குடன் தகவல் பரிமாற்றப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-201910:58:53 IST Report Abuse
முருகன் இது பொதுமக்களுக்கான செயலி அல்ல என்று பதிவிறக்கம் செய்தவுடன் செயலியே அறிவிக்கிறது.தவறான தகவல்.
Rate this:
Share this comment
Cancel
21-மே-201909:17:25 IST Report Abuse
mannandhai What does it mean SUVIDHA. I travelled in a train named Suvidha twice last week from Chennai to Coimbatore. For regular Sleeper Class Non-AC charges were more than ₹1100. No benefits. Unclean coaches. In both events train was stopped in between Tiruppur and Coimbatore to allow all trains to pass through. Scheduled time of arrival at Coimbatore was 4.15 AM. In both events it reached only closer to 7AM. Atrocious. To whom we should complain. Now same Suvidha name is used for counting of votes. I think results will be announced only before year 2024 elections.
Rate this:
Share this comment
Cancel
21-மே-201905:54:16 IST Report Abuse
சரவணன் வேட்பாளர்கள் மட்டுமே உபயோகிக்கும் வகையில் உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X