ம.பியில் பெரும்பான்மை காங்., நெருக்கடி : பா.ஜ போர்க்கொடி

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement

போபால் : ம.பியில் பெரும்பான்மையை நிரூபணம் செய்ய சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி கவர்னரிடம் கடிதம் கொடுப்பதாக பா.ஜ, காங்.,கிற்கு நெருக்கடி கொடுக்கிறது.







கணிப்பு


மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 230தொகுதிகளில், காங்., 114ல் வென்றது.பா.ஜ., 109; பகுஜன் சமாஜ், இரண்டு; சமாஜ்வாதி மற்றும் சுயேச்சை தலா, ஒரு தொகுதியில் வென்றன.பெரும்பான்மைக்கு இரண்டு பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள், காங்.,குக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது, லோக்சபாவுக்கு தேர்தல் நடந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், மத்தியில் மீண்டும், பா.ஜ., அரசு அமையும் என்று தெரிய வந்துள்ளது.மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள, 29 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.






இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய பிரதேச சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான, கோபால் பார்கவா கூறியுள்ளதாவது:முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு, முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. விவசாயிகளுக்கான கடன் ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறது; ஆனால், தகவல் தர மறுக்கிறது.அதனால், முக்கிய பிரச்னைகள் குறித்தும், தன் அரசின் பலத்தை நிரூபிக்கவும், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி, கமல்நாத்துக்கு உத்தரவிடக் கோரி, கவர்னர், ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுத உள்ளோம். முக்கியமான பிரச்னைகளில், சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

சமீப காலமாகவே, காங்கிரசுக்கும், கூட்டணி கட்சியான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.


ஆதரவு வாபஸ்


சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தங்களுக்கு தொகுதி ஒதுக்குவதில், வேண்டுமென்றே காங்கிரஸ் தாமதித்ததாக, மாயாவதி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும், காங்கிரஸ் ஈடுபட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த மாயாவதி, 'காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற போக்கை தொடர்ந்தால், அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவோம்' என, எச்சரித்திருந்தார்.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியான, பா.ஜ., களத்தில் இறங்கியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் கமல்நாத்தை வலியுறுத்தி உள்ளது.






மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!


ம.பி., மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து, காங்., பொதுச் செயலரும், மத்திய பிரதேச மாநில கட்சி பொறுப்பாளருமான, தீபக் பப்பாரியா கூறியதாவது:கமல்நாத் அரசை கவிழ்ப்பதற்காக, மோசமான நடவடிக்கையில், பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் இருந்த, பா.ஜ., அரசு மீது, மக்கள் நம்பிக்கை இழந்தனர். அதனால் தான், காங்., அரசை மக்கள் அமைத்துள்ளனர். மக்களின் முடிவுக்குஎதிராக செயல்பட, பா.ஜ., நினைக்கிறது. இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு, அவர் கூறினார்


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
21-மே-201907:02:59 IST Report Abuse
sundarsvpr காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தாலும் நிர்வாகம் மந்த நிலையில் இருக்கும். ஏனென்றால் ஸ்திரம் இல்லாத ஆட்சி. இதனை மக்கள் முடிவு செய்யவேண்டும். ஒரு வார்த்தை தேர்வு அதாவது ஆம் அல்லது இல்லை. குதிரை பேரம் தான் என்றால் சட்டமன்றம் முடிவு செய்யட்டும். .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X