சிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல்

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் நடந்த, 'சாரதா சிட்பண்ட்' மோசடி வழக்கில், தன்னை கைது செய்வதற்கு அளித்திருந்த கால அவகாசத்தை நீட்டிக்கும்படி, அம்மாநில போலீஸ் உயரதிகாரி, ராஜிவ் குமார், மனு தாக்கல் செய்துள்ளார்.







தடை உத்தரவு


மேற்கு வங்கத்தில் முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிண முல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில் நடந்த, சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த, கோல்கட்டா போலீஸ் கமிஷனராகவும், சிறப்பு விசாரணைக் குழு தலைவராகவும் இருந்த, ராஜிவ் குமார், ஆதாரங்களை மறைத்துள்ளதாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கில், ராஜிவ் குமாரை கைது செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.






அவகாசம் நீட்டிப்பு


இம்மாதம், 17ல், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அந்தத் தடையை, உச்ச நீதிமன்றம் விலக்கியது. அதே நேரத்தில், முன்ஜாமின் கோருவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், 'ஒரு வாரத்துக்கு கைது செய்யக் கூடாது' என்றும் உத்தரவிட்டது.இந்நிலையில், ராஜிவ் குமார் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'கோல்கட்டாவில் போராட்டம் நடந்து வருவதால், நீதிமன்றங்கள் செயல்படவில்லை. அதனால், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டுள்ளது.




இதை விசாரித்த, நீதிபதிகள், இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா அடங்கிய, கோடைக்கால விடுமுறை அமர்வு கூறியதாவது:தலைமை நீதிபதி தலைமையிலான, மூன்று நீதிபதிகள் அமர்வு தான், இந்த அவகாசத்தை அளித்துள்ளது. அதனால், இந்த மனுவை, தகுந்த அமர்வுக்கு அனுப்புவது குறித்து, பதிவாளரை அணுக வேண்டும். இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja indian -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201917:26:55 IST Report Abuse
raja indian மக்களுடைய Pulse பணத்தை திருடிய இந்த அதிகாரியும் மம்தாவும்சாரதா சிட் பண்ட்ஸ் திருடியும் தைரியமாக அரசியல் செய்யும் பெண்மணி.
Rate this:
Share this comment
Cancel
Ravi K - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மே-201914:46:55 IST Report Abuse
Ravi K நீதிபதிகள் சரியாக கடவுளுக்கு பயந்து வேலை செய்தாலே நம் நாட்டின் அணைத்து குற்றங்களும் குறையும்.
Rate this:
Share this comment
Cancel
21-மே-201911:35:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சிதம்பரம், சோனியா குடும்பம் போல இவருக்கும் கைதுசெய்ய நிரந்தர தடை விதியுங்கள், எதற்கு நேரத்தை வீணாக்கிக்கொண்டு, இன்னும் பலபேருக்கு ஜாமீன் , கைது செய்ய தடை கொடுக்க வேண்டி இருக்கிறதே , அதுதானே நம்முடைய முழுநேர வேலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X