பொது செய்தி

இந்தியா

இந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்!

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (45)
Advertisement

புதுடில்லி: 'இந்திய குடும்பங்களில், தங்கம் கையிருப்பு, 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும்' என, உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.






இது குறித்து, கவுன்சிலின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர், சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்க ஆபரணங்கள் குறித்து, உலக தங்க கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இந்திய குடும்பங்களில், 23 ஆயிரம் - 24 ஆயிரம் டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இது, தற்போதைய ஆய்வில், 24 ஆயிரம் - 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 760 டன்னாக இருந்தது. இது, இந்தாண்டு, 750 - 850 டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அன்னியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது; அத்துடன், தங்கம் விலையும் குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு, ஜன., - மார்ச் வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 5 சதவீதம் அதிகரித்து, 159 டன்னாக உயர்ந்துள்ளது.

அக் ஷய திருதியை மற்றும் திருமண சீசன் காரணமாக, நடப்பு, ஏப்., - ஜூன் காலாண்டிலும், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு, பருவ மழை நன்கு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கிராமப்புற பொருளாதாரம் நன்கு இருக்கும் என்பதால், தங்கம் விற்பனை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







மொத்த மதிப்பு:


இந்திய குடும்பங்களில், தற்போது, 25 ஆயிரம் டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில், 608.80 டன், தங்கம் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 40 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-மே-201920:27:19 IST Report Abuse
Bhaskaran ஒரு விமான நிலைய ஓடுபாதை ஒரு அடிக்கனத்தில் இந்தியாவில் தனிநபர்களிடம் இருக்கும் தங்கத்தைவைத்து அமைக்கலாம் என்று முன்பு எதிலோ படித்தது நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
21-மே-201916:53:21 IST Report Abuse
Sivagiri போச்சு . ... கிராமுக்கு நுறு ரூபாய் ப்ராபர்டி டேக்ஸ் உடனே கட்டீட்டு தங்கத்தை வாங்கிக்கோ என்று இன்கம்டேக்ஸ் மூலமா எல்லா தங்கத்தையும் பிடுங்கிட்டுப் போகப் போராரு மோடி . . .
Rate this:
Share this comment
Cancel
21-மே-201916:52:55 IST Report Abuse
ஆப்பு சொம்பை எடுத்து உள்ளே வெக்கணும். தங்கத்தை பறிமுதல் பண்ண ஆள் அனுப்புவாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X