ராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (83)
Advertisement

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் 28 வது ஆண்டு நினைவு நாளான இன்று (21.05.2019) டில்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் காங்., தலைவர் ராகுல், ராஜிவ் மனைவி சோனியா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.பயங்கரவாத ஒழிப்பு தினம்


ராஜிவ் தமிழகத்தின் வருகையின் போது ஸ்ரீ பெரும்புதூரில் கடந்த 1991 ம் ஆண்டில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இந்த மரணம் காங்., மற்றும் நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொடூரமாக கொல்லப்பட்ட இந்நாளை பயங்கரவாத ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

28 வது நினைவுநாளான இன்று டில்லியில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், காங்., தலைவர் ராகுல், ராஜிவ் மனைவி சோனியா , மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர் வாத்ரா, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நாடு முழுவதும் காங்., தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக காங்., அலுவலகத்தில் காங்., தலைவர் அழகிரி மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


அன்பை போதித்தவர்


ராகுல் அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை மிக சிறந்த மனிதர் , அன்பானவர், இரக்கமானவர், பாசமானவர், எனக்கு, எனது தந்தை அனைவர் மீதும் அன்பு செலுத்த கற்று கொடுத்துள்ளார். யார் மீதும் வெறுப்பு கூடாது. மன்னிக்கும் தன்மை வேண்டும் என்பார். எனது தந்தையை இழந்து விட்டேன். அவரது மறைவுநாளில் அன்புடனும், நன்றியுடனும் நினைவுகூர்கிறேன்.

Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Siva - ,
21-மே-201920:48:20 IST Report Abuse
R.Siva The terrorists not only killed zRajiv Gandhi, but also killed 19 innocent lives. They also violated Indian Arms act , Indian explosives act ,and Indian Passport act. Hence , seeking sympathy for them is inhumane, heinous and will set a bad precedent.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மே-201919:14:26 IST Report Abuse
Nallavan Nallavan பயங்கரவாதி, பயங்கரவாதிகள் ன்னா என்ன ?? அவை, கோட்ஸே, புலிகளையும் உள்ளடக்கிய வார்த்தைகளா ?? இல்ல, கோட்ஸே மட்டும்தான் தீவிரவாதியா ??
Rate this:
Share this comment
Cancel
21-மே-201917:38:49 IST Report Abuse
ஜெகன் என்னது, பயங்கரவாத ஒழிப்பு தினமா? அப்போ தமிழ்நாட்டில் ஒரு பிரதமரை கொன்ற பயங்கரவாதி தமிழன்னு ஹாசன் கூவுவாரா? அது தவிர எங்களுக்கு ஓட்டு போட்டா அந்த பயங்கரவாதிகளை விடுதலை செஞ்சுருவோம்ன்னு காங்கிரஸ் பொரியல் கட்சி கூவுதே? அத பத்தி வின்ஸி மூச்சு விடல்ல போல?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X