முலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (35)
Advertisement
அகிலேஷ், முலாயம் சிங், உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு, சிபிஐ,

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் சமாஜ்வாதி தலைவர்கள் முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோருக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி என்பவர், 2005ல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: சமாஜ்வாதி தலைவர்கள் முலாயம் சிங், அகிலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து குவித்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.





இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்து விசாரிக்கும்படி, 2007ல், சி.பி.ஐ.,க்கு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முலாயம் தரப்பில், 2012ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு முலாயம் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்கள் குடும்பத்தினர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.






இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் ஆதாரம் ஏதும் இல்லை எனக்கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-201900:43:14 IST Report Abuse
கோகுல் மதுரை டைம் மிஷின் மாதிரி ஏதாவது இருந்தா, இறந்த காலத்தில் தவறு நடந்த இடத்திற்கே சென்று அதை பதிவு செய்து வரலாம். சாட்சியாக சமர்ப்பிக்கலாம். இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் டைம் மிஷினை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
21-மே-201920:25:32 IST Report Abuse
madhavan rajan ஆதாரம் இல்லை என்று சொல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் விசாரணை உலகிலேயே வேறெங்கும் காணமுடியாத அதிசயம். சபாஷ் சிபிஐ. 2007 ல விசாரணை செய்யவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால், 2012 ல் விசாரணை செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்களாம். இது அதைவிட தமாஷ்.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-மே-201917:37:16 IST Report Abuse
S.Baliah Seer தேர்தல்தான் முடிந்து விட்டதே.இனி சிபிஐ -க்கு ஏது வேலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X