பொது செய்தி

இந்தியா

ரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (15)
Advertisement
ஐஆர்சிடிசி, ஏஜென்ட்

புதுடில்லி: ரயிலில் பயணம் செய்ய பலரும் ஏஜென்ட்களை நாடுவார்கள். ஆனால், ஒருவர், ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் ஆக மாறினால், மாதம் ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.


ஏஜென்ட் ஆவது எப்படி

ஐஆர்சிடிசி ஏஜென்ட் ஆக பான் கார்டு, ஆதார் கார்டு, மொபைல் எண், இமெயில் ஐடி, போட்டோ, அலுவலக முகவரி ஆதாரம், வீட்டு முகவரி ஆதாரம், பதிவு விண்ணப்பம் ஆகியவை தேவை. பதிவு செய்வதற்காக இரண்டு திட்டங்கள் உள்ளன. இதன்படி ஓராண்டிற்கான பதிவுக்கட்டணம் ரூ.3,999, இரண்டு ஆண்டுகளுக்கான பதிவு கட்டணம் ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.







பதிவு நடைமுறைகள்

1. ஆன்லைன் மூலம் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

2. ஆவணங்கள், கையெழுத்திட்ட விண்ணப்ப படிவம் உள்ளிட்டவற்றை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.

3. இந்த ஆவணங்களை ஐஆர்சிடிசி ஆய்வு செய்யும். தொடர்ந்து, ஐஆர்சிடிசி ஐடி உருவாக்க ரூ.1,180 செலுத்த வேண்டும்.
4. இதன் மூலம், ஒரு முறை கடவுச்சொல், வீடியோ மூலம் சரி பார்க்கப்பட்ட பின்னர், டிஜிட்டல் ஆவணம், பதிவு செய்பவரின் பெயரில் உருவாக்கப்படும்.
5.யுஎஸ்பி டோங்கிள், பதிவு செய்பவரின் வீட்டு முகவரிக்கு வரும். இதில், டிஜிட்டல் சான்றிதழ் இருக்கும். இதன்பிறகு, ஐஆர்சிடிசிக்கு பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
6. பதிவு கட்டணம் செலுத்திய பிறகு, இமெயிலுக்கு ஐஆர்சிடிசி சான்று வரும்
7. இதன் மூலம் அந்த நபர், ஐஆர்சிடிசியின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்ட் ஆக முடியும். இதன் பிறகு, அவர் ஆன்லைன் மூலம் பொது மக்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்க முடியும்.




எப்படி பணம் கிடைக்கும்


ஐஆர்சிடிசி ஏஜென்ட், கணக்கில்லாமல் மின்னணு டிக்கெட்களை பதிவு செய்ய முடியும். தட்கல், காத்திருப்போர் பட்டியல், ஆர்ஏசி டிக்கெட்கள் என அனைத்து வகை ரயில் டிக்கெட்களையும் பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி இணையதளத்தை ஏஜென்ட் திறந்ததும், ஐஆர்சிடிசி விண்ணப்பம் மூலம் டிஜிட்டல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டிருந்தால் தான் டிக்கெட் புக் செய்ய முடியும்.
டிக்கெட் புக்கிங் ஏஜென்ட்களுக்கு கமிஷன் மூலம் சம்பாதிக்க முடியும். இது டிக்கெட்களின் வகையை பொறுத்து மாறுபடும். ஏசி இல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்யும்போது ஒரு பிஎன்ஆர்க்கு ரூ.20 கிடைக்கும். இது, ஏசி பெட்டிகளில் டிக்கெட் பதிவு செய்யும் போது ரூ.40 கிடைக்கும். கூடுதலாக, டிக்கெட் கட்டணத்தில் ஒரு சதவீத கமிஷனும் கிடைக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
22-மே-201903:07:00 IST Report Abuse
Vetri Vel ஒன் மோர் பக்கோடா பார்சல்... பக்கோடா ரெடி... வாங்க தான் ஆளு இல்ல... ஈ ஒட்டுது.. பக்கத்து தெரு பங்கஜம் அக்கா... கடைய மூடிடலாம்ணு யோசிச்சிகிட்டு இருக்கு.. ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கு காசு கிடைக்காது னு மோசடி அரசாங்கம் அறிவிச்சதில இருந்து.. டிக்கெட் வியாபாரம் படுத்திடுச்சு... எதுக்கும்.. உண்மை நிலவரம் சேர்த்து சொன்ன நல்லா இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
nizm - vellore,இந்தியா
21-மே-201920:18:46 IST Report Abuse
nizm நோ கமிஷன்
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
21-மே-201918:56:36 IST Report Abuse
sahayadhas நாளைக்கு போரதுக்கு தான். இன்றைக்கு Agent கிட்ட போவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X