‛‛ஆப்பிளை'' புறக்கணித்த சீனர்களின் தேசப்பற்று

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (43)
Advertisement
ஆப்பிள், ஹூவெய், சீனர்கள்

பெய்ஜிங்: சீனாவில் ஹூவெய் நிறுவனத்திற்கு, அமெரிக்காவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க தயாரிப்பான 'ஆப்பிள் மொபைல் போன் மற்றும் அதன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்' என்ற பிரசாரம் சீனாவில் வலுப்பெற்றுள்ளது. இது சீனர்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளது. இதேபோல் எந்த ஒரு நாடும் இந்தியாவை மிரட்டினால், அரசுக்கு அனைத்து இந்தியர்களும் ஆதரவளிக்க வேண்டும்.

சமீபகாலமாக அமெரிக்காவில் தொலை தொடர்பு தொழில்களில், சீன நிறுவனங்களின் பங்கு கணிசமாக உள்ளது. இந்நிறுவனங்கள் அமெரிக்கர்களின் தகவல்களை திருடுவதாக அந்நாட்டு அரசு சந்தேகிக்கிறது.
சீன நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் வகையிலும், அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுவதை தடுப்பதற்காகவும், தேசிய அவசர நிலை பிரகடனத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
சில அன்னிய நாட்டு நிறுவனங்களால், அமெரிக்க தொழில்நுட்பம் திருடப்படுவதால், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்கும் வகையில், தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, சீனா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்களை, அமெரிக்க நிறுவனங்கள் இனி பயன்படுத்த முடியாது. இது சீனாவின் ஹூவெய் நிறுவனத்தை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.


கண்டனம்


இதனால் சீனாவின் ஹூவெய் நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன அரசு, சீன நிறுவனங்களை துன்பப்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளதுடன், ஹூவெய் நிறுவனத்திற்கு துணை நிற்போம் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு பிரச்னைகளை சரி செய்ய தயாராக உள்ளதாக ஹூவெய் நிறுவனம் கூறியுள்ளது.
பிரசாரம்


இந்நிலையில் சீனாவில், ஆப்பிள் நிறுவனத்தை (அமெரிக்க நிறுவனம்) புறக்கணிப்போம் என்ற பிரசாரம் வலுப்பெற்றுள்ளது. அந்நாட்டில் சமூக வலைதளமான வெய்போவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராகவும், டிரம்பிற்கு எதிராகவும் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர், வர்த்தக போரை பார்ப்பதற்கு வெட்கமாக உள்ளது. பணம் கிடைத்ததும் எனது ஐபோனை மாற்றிவிடுவேன் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ஹூவெய் நிறுவன மொபைல் சிறப்பாக உள்ளது. இது 'ஆப்பிளை' எட்டு துண்டுகளாக நறுக்கிவிடும் எனக்கூறியுள்ளார். மற்றொருவர், ஆப்பிள் போனை விட ஹூவாய் போன்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இது போன்ற சிறப்பான மொபைல் இருக்கும் போது, ஆப்பிளை பயன்படுத்துவது ஏன் என கேட்டுள்ளார். இதேபோல் ஏராளமான சீனர்கள், ஹூவெய் நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.தடை


'ஆப்பிளை புறக்கணிப்போம் ' என்ற பிரசாரம் நடப்பது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஐபோன்கள் விற்பனையை குறைக்கவும், ஹூவெய் நிறுவன மொபைலை தங்கள் ஊழியர்கள் வாங்கவும், சீன நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வழங்கின. 20க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஹூவெய் தயாரிப்புகளை வாங்குவதாக அறிவித்தன. கடந்த டிசம்பர் மாதம், ஆப்பிள் போனை வாங்கவும், விற்கவும் சீன கோர்ட் ஒன்று தடை விதித்தது. இதனையடுத்து, அந்நாட்டிற்கு என சிறப்பு அப்டேட்டை ஐபோன் வெளியிட்டது.சீனாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வலுத்து வரும் பிரசாரம், சீனர்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளது.
இதேபோல், இந்திய நிறுவனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், நாமும் அதே போல் ஒற்றுமையாக இருந்து, நமது நோக்கத்தில் வெற்றி பெற வேண்டும். இப்படிப்பட்ட விஷயத்தி்ல மத்திய அரசின் நடவடிக்கைகளையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும். இப்படி செய்தால், எந்த இந்திய நிறுவனத்திற்கு எதிராகவும் வெளிநாடுகள் நடவடிக்கை எடுக்க தயங்கும்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-மே-201904:11:23 IST Report Abuse
blocked user வசதியுள்ளோர் ஆப்பிள் போன் வாங்க வெளிநாடு வந்து வாங்கிச்செல்கிறார்கள். பணம் வைத்து இருப்பவர்கள் அரசாங்கம் பற்றி கவலைப்படுவது கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
22-மே-201903:15:18 IST Report Abuse
Vetri Vel மேக் இன் இந்தியா.. திட்டத்தின் கீழ் சீனா காரனிடம் இருந்து ... இரும்பு மனிதனுக்கு இரும்பு சிலை வாங்கியது போன்ற தேச பக்தி வேண்டும்... னு சொல்லலாமே..
Rate this:
Share this comment
Cancel
rm -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201919:46:59 IST Report Abuse
rm All factories can be shifted to India but the waste materials from factories especially chemicals will make India world kuppaithottii.So we should be careful about the environment. China already full of pollution due to this foreign manufacturing units.India should first produce for its own market so that no one can rely on foreign goods. Some sectors we can For example clothes,food items, toys ,medicine etc.,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X