பொது செய்தி

இந்தியா

அளவைகளில் வருகிறது மாற்றம்

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
அளவைகளில், வருகிறது, மாற்றம்

புதுடில்லி: இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் நான்கு வகையான அளவைகளில் புதிய வழிமுறை பின்பற்றப்பட உள்ளது.


கடந்த ஆண்டு நவம்பரில் பிரான்சின் தலைநகர் பாரீசில் நடந்த ஒரு மாநாட்டில் 7 வகையான அளவைகளில் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 60-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டன.

தற்போது உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் எடைகல்களுக்கு மூல எடைக்கல்லான "கிராண்ட் கே" என்பது 90 சதவீத பிளாட்டினமும், 10 சதவீத இரிடியமும் கலந்து லண்டனில் செய்யப்பட்ட 4 சென்டிமீட்டர் உருளை. பாரிசின் செவெரஸில் கூடிய எடைகள் மற்றும் அளவீடுகளின் சர்வதேச துறையால் 1889 ஆம் ஆண்டு அடிப்படை அளவையாக உறுதி செய்யப்பட்டது.


latest tamil news





கிலோ கிராம்



பொருட்கள் காற்றினால் அணுக்களை இழக்கலாம் அல்லது காற்றிலுள்ள மூலக்கூறுகளை ஈர்த்துக்கொள்ளலாம் என்பதால், அதன் எடை அளவு கடந்த நூற்றாண்டில் பத்து மைக்ரோ கிராம்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இயந்திர மற்றும் மின்காந்த ஆற்றலை பயன்படுத்தி கிப்பிள் அல்லது வாட் சமநிலையை பயன்படுத்தி எதிர்காலத்தில் கிலோகிராம் அளவிடப்படும். பொருளை கொண்டு எடையை வரையறுக்காமல், மாறிலிகள் கொண்டு எடை அளவிடப்படும். இந்த வரையறையை மாற்ற முடியாது. சேதமடையாது.


பிற அளவைகள்




ஆம்பியர்

ஒரு நேரத்தில் ஒரு எலக்ட்ரானை நகர செய்வதன் மூலம் அளவிடக்கூடிய மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற எலக்ட்ரான் குழாயில் மின்சாரத்தை செலுத்தி, அதிலுள்ள எலக்ட்ரான்களை எண்ணுவதன் மூலம் ஆம்பியர் அளவிடப்படும். ஆம்பியரை (மின்சாரம்) அளவிடும் புதிய வழிமுறையையும் ஏற்றுக்கொள்வர்.


கெல்வின்



கெல்வின் (வெப்ப அலகு) ஒரு நிலையான தட்பவெப்பத்தில் வாயு நிறைந்திருக்கும் கோளத்தில் ஒலியின் வேகத்தை அளவிடும் வெப்பநிலை மானியலை பயன்படுத்தி வரையறுக்கப்படும்.


மோல்

பொருளின் சாராம்சத்தை அளவிட பயன்படும் அலகான 'மோல்', தூய்மையான சிலிக்கான்-28ன் சரியான கோணத்தில் இருக்கும் அணுக்களின் எண்ணுகின்ற கருவியை பயன்படுத்தி மறுவரையறை செய்யப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
22-மே-201900:13:23 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே மாற்றம் செய்த உங்களுக்கே புரியல போல இருக்கு. எங்களுக்கு சுத்தம். என்னவோ செய்யுங்க. இதுக்கும் மோடி ஒழிக என்று ஒரு கூட்டம் ஆரம்பிக்கும் பாருங்க. நல்ல காலம் தேர்தல் முடிந்து விட்டது. அடுத்தது எந்த மாநிலத்தில் தேர்தல்? அப்போது இதை எதிர்கட்சிகள் கிளப்பி விட்டு மோடி ஒழிக என்று வியாபாரிகள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-மே-201900:05:41 IST Report Abuse
Pugazh V என்ன செய்தி இது
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
21-மே-201921:09:56 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஒண்ணுமே புரியலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X