ஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மறுப்பு

Added : மே 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ஊக்கமருந்து, சர்ச்சை, கோமதி, மறுப்பு

புதுடில்லி: ஊக்கமருந்து சர்ச்சை குறித்த செய்தியை மறுத்துள்ளார் தமிழக தடளக வீராங்கனை கோமதி.

இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, 30. தமிழகத்தை சேர்ந்த இவர், சமீபத்திய ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் (தோகா) 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். இப்போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்டெராய்டு என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிகிறது. இவர் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோமதியின் 'பி' மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரியவந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற பதக்கமும் பறிபோகலாம். இதை கோமதி மறுத்துள்ளார்.

இது குறித்து இவர் கூறுகையில்,'' ஊக்கமருந்து சோதனையில் நான் சிக்கியதாக, பத்திரிகையில் படித்துதான் தெரிந்து கொண்டேன். இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் எவ்வித தகவலும் வரவில்லை. இப்படிப்பட்ட தவறான செய்தி எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-201907:54:37 IST Report Abuse
kulandhai Kannan Will those, who showered praises and gifts on her, take them back, if doping charges are proved??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X