சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 21, 2019
Advertisement
  'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., முதல்வர்: எட்டு வழிச்சாலை என்பது மிகவும் அவசியம். அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்ப, சாலை வசதிகளை அமைக்க வேண்டும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.

டவுட் தனபாலு: விவசாயிகளிடம் ஒத்துழைப்பு கேட்கும் நீங்க, 'எட்டு வழிச்சாலை திட்டம், எங்களால் தான் நிறுத்திவைக்கப்பட்டது'ன்னு, உரிமை கோரிவரும், பா.ம.க.,விடம், இது குறித்து பேசினீங்களா... தேர்தல் முடிந்ததால், இதை, அக்கட்சி கண்டுக்காது என்ற நினைப்பில், விட்டுட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே...!


ம.ஜ.த.,வைச் சேர்ந்த, கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சர், ரேவண்ணா: கர்நாடகாவில், தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. மழை பெய்து அணைகள் நிரம்பினால், தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படும்.

டவுட் தனபாலு: காவிரி மேலாண்மை வாரியம், நீதிமன்றம், மத்திய அரசு என, யார் என்ன சொன்னாலும், மழை பெய்து, கர்நாடகா அணைகள் நிரம்பினால், வழியின்றி உபரி நீரை மட்டும், தமிழகத்துக்கு திறந்துவிடுவது என்பதில் உறுதியாக இருக்கீங்க... இதற்கு எதற்கு இவ்வளவு சுத்திவளைச்சுட்டு என்பது தான், மக்களின், 'டவுட்!'


தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை: தமிழகத்தில், இ.பி.எஸ்., ஆட்சிக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது. அ.தி.மு.க., கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும். ஸ்டாலின் தப்புக் கணக்கு போடுகிறார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., அரசின் ஆயுள் குறித்து, நீங்க எதற்குங்க, வரிந்துகட்டி பதிலடி தர்றீங்க... பிரதமர் மோடி, தமிழக அரசை தாங்கிப் பிடித்திருக்கிறார்னு, தமிழக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும், 'டவுட்'டுக்கு, இதுபோன்ற விளக்கங்கள் தான் வலுசேர்த்து வருது என்பதை, எப்போ உணருவீங்களோ...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X