நாளை தேர்தல் முடிவுகள் பதற்றத்தில் ஆந்திர போலீசார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாளை தேர்தல் முடிவுகள் பதற்றத்தில் ஆந்திர போலீசார்

Added : மே 21, 2019

லோக்சபா தேர்தலோடு, சட்டசபை தேர்தலையும் சந்தித்துள்ள ஆந்திராவில், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாநில போலீசார் இடையே பதற்றமும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சி அரசு அமைந்துள்ளது.ஓட்டு எண்ணிக்கைமாநிலத்தில் உள்ள, 25 லோக்சபா தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்.,11ல் நடந்த முதல் கட்டத்தில்,தேர்தல் நடந்தது.நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 55 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது; 25 ஆயிரம் பேர், இதில் ஈடுபட உள்ளனர்.இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், லோக்சபா தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு உள்ளது.
போலீசார் அச்சம்
அதே நேரத்தில், உள்ளூர், 'டிவி' சேனல்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், தெலுங்கு தேசம் அதிக இடங்களில் வெற்றி பெறும் என, கூறப்பட்டு உள்ளது.ஓட்டுப் பதிவின்போது, மாநிலத்தின் பல இடங்களில், இவ்விரு கட்சியினர் இடையே, பல இடங்களில் மோதல் நடந்தது; அதில், இருவர் உயிரிழந்துள்ளனர். அதனால், ஓட்டு எண்ணிக்கையின்போதும், இரு கட்சியினர் இடையேயும் மோதல் ஏற்படக் கூடும் என, போலீசார் அஞ்சுகின்றனர்.பாதுகாப்புகுறிப்பாக, ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊர்கள் உள்ள, ராயலசீமா பிராந்தியத்தில், மோதல்கள் அதிகம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பிராந்தியத்தில், இவ்விரு கட்சியினர் இடையே, அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த அரசியல் மோதல்கள், ஜாதி ரீதியாக நடந்துள்ளதால், ஆந்திர போலீசார், அதை தடுப்பதற்கானவியூகங்களை வகுத்துவருகின்றனர்.தற்போது, 20 கம்பெனி கள் கொண்ட, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர். மேலும், 10 கம்பெனி களை அனுப்பும்படி, ஆந்திர அரசு கோரியுள்ளது.பரபரப்புஇதைத் தவிர, ஆந்திர சிறப்பு போலீஸ் படையின், 37 கம்பெனிகளைச் சேர்ந்த, 3,700 பேர், பதற்றம் நிறைந்த, 70 இடங்களில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை, அமைதியாகவும், மாநிலத்தில் பிரச்னை இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய, மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதனால், போலீசார் இடையே, பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X