பதிவு செய்த நாள் :
பிரக்யாவுக்கு எதிரான வழக்கு
தூசி தட்டுகிறது ம.பி., அரசு

போபால், சர்ச்சைக்குரிய பெண் சாமியாரும், போபால் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளருமான, பிரக்யா சிங் மீதான, பழைய கொலை வழக்கை, மீண்டும் விசாரிக்க, மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பிரக்யாவுக்கு,எதிரான,வழக்கு,தூசி,தட்டுகிறது,ம.பி., அரசும.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையி லான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள போபால் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில், பிரக்யா சிங் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்.,சார்பில், அந்த கட்சியின் மூத்த தலைவர், திக்விஜய் சிங் போட்டியிட்டார். பிரக்யா, மஹாராஷ்டிராவின், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்

சாட்டப்பட்டவர். இந்த வழக்கில், அவர், 'ஜாமின்' பெற்றுள்ளார்.


இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், போபால் தொகுதியில், பிரக்யாவுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பிரக்யா சிங் மீதான, பழைய கொலை வழக்கு ஒன்றை, துாசி தட்ட, மத்திய பிரதேச மாநில, காங்., அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, அம்மாநில சட்ட அமைச்சர்,பி.சி.சர்மா கூறியதாவது:


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, சுனில் ஜோஷி, 2007ல், சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, பிரக்யா உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றம் சாட்டப் பட்டது.'இந்த வழக்கில், போதிய சாட்சியங்கள் இல்லை' என கூறி,அனைவரும் விடுவிக்கப்பட்ட னர். தற்போது இந்தவழக்கை, மீண்டும் விசாரிக்க வும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வும் திட்டமிட்டு உள்ளோம். இதுகுறித்து சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப் பட்டுள்ளது.கொலை நடந்த மாவட்டத்தின்

Advertisement

கலெக்டராக இருந்தவர், மேல் முறையீடு செய்வது தொடர்பாக, சட்ட நிபுணர்களின் கருத்துகளை கேட்கவில்லை. தானாகவே வழக்கை முடித்து உள்ளார்.எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கூறினார்.இதுகுறித்து, மத்திய பிரதேச மாநில, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரஜ்னிஷ் அகர்வால் கூறுகையில், ''ம.பி., மாநில அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கத்து டன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மே-201917:15:03 IST Report Abuse

Endrum Indianஇப்படித்தான் சொல்லி சொல்லி மைனோ /சோனியா காங்கிரஸ் மத்திய அரசில் இருந்த போது மோடி மீது பழி போட்டது , அவர் ஒரு ஓரமாக குஜராத்தில் ஆட்சி செய்து கொண்டிராத போது. அவர் மிக பெரிய அளவில் வளர்ந்து விட்டார் அதனால். நாளையோ மறுநாளோ கவிழப்போகும் இந்த மத்திய பிரதேச 1984 17,000 சீக்கிய கொலைகள் புகழ் கமல்நாத் அரசு ஆட்சியில் அதே போல பராக்கியா மீது நடக்கின்றது, அப்போ அவள் தான் மத்திய பிரதேசத்தின் அடுத்த முதன் மந்திரி என்று சொல்லுங்கள் நிச்சயமாக.

Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
22-மே-201913:08:27 IST Report Abuse

Nallavan Nallavanஇதேமாறி பாஜக செஞ்சா "பழிவாங்கும் செயல்" -ன்னு புழுதி வாரித் தூத்துற பயலுவ .... இருக்கானுவளே ......

Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
23-மே-201903:23:31 IST Report Abuse

 Muruga Velஉங்க பெங்கால் பேகத்தை பத்தி கொஞ்சம் எழுதுங்க ..சத்தத்தையே காணோம் .. ...

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-மே-201911:41:44 IST Report Abuse

Chowkidar NandaIndiaஅப்போது 1984 இல் சீக்கியர்கள் படுகொலை வழக்கில் மூளையாக செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் திடுதிப்பென்று யோக்கியர் என்று விடுதலை செய்யப்பட்டு தற்போது முதல்வராக இருக்கும் எக்ஸ் கார் டிரைவர் மேதகு கமல்நாத் வழக்கை நாமும் தூசி தட்டி எடுக்க வேண்டியதுதான்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X