ஆணையர் கோரிக்கை ஆணையம் நிராகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆணையர் கோரிக்கை ஆணையம் நிராகரிப்பு

Added : மே 21, 2019 | கருத்துகள் (1)

புதுடில்லி, 'தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான விவகாரங்களில், ஆணையர்களிடையே அதிருப்தி கருத்து இருந்தால், அதை, பகிரங்கமாக வெளியிட முடியாது' எனக்கூறி, ஆணையர்களில் ஒருவரான, அசோக் லவசாவின் கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.தலைமை தேர்தல் ஆணையத்தில், தற்போது, தலைமை தேர்தல் ஆணையராக, சுனில் அரோரா உள்ளார். அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகியோர், ஆணையர்களாக உள்ளனர்.இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. 'இது தொடர்பாக, மூன்று ஆணையர்கள் விசாரணை நடத்தியபோது, நான் தெரிவித்த அதிருப்தி கருத்தை, மற்ற ஆணையர்கள் ஏற்கவில்லை'என, அசோக் லவசா, குற்றச்சாட்டு கூறியிருந்தார்.இதுகுறித்து,அவர் கூறியதாவது:'மைனாரிட்டி' கருத்து என்ற அடிப்படையில், நான் தெரிவித்த சில அதிருப்தி கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை. இதனால், தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்பது, அர்த்தமற்றதாக உள்ளது. நான் தெரிவித்த கருத்துகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. இதற்கு பின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான விசாரணைகளில், அதிருப்தி கருத்து தெரிவிக்கப்பட்டால், அது, மூன்று ஆணையர்களில் ஒருவர் மட்டுமே தெரிவித்த கருத்தாக இருந்தாலும், அது, ஆவணங்களில் முறையாக பதிவு செய்யப்படும்.அதேநேரத்தில், இந்த விஷயங்களை பகிரங்கமாக வெளியில் தெரிவிக்க முடியாது. இந்த விஷயத்தில், சட்ட நடைமுறைகள், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X