பதிவு செய்த நாள் :
முரண்டு!
ஓட்டு உறுதி சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும்...
100 சதவீதம் எண்ணும்படி ஆணையத்துக்கு மனு

'தேர்வு செய்யப்படும், ஐந்து ஓட்டுச் சாவடிகளில் பதிவான ஒப்புகை சீட்டுகளை தான் முதலில் எண்ணி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும். அதில் முரண்பாடு ஏற்பட்டால், அந்த தொகுதியில் பதிவான அனைத்து ஓட்டுகளையும் எண்ணி, ஒப்பிட வேண்டும்' என, 22 எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளன.

ஓட்டு ,உறுதி சீட்டு, விவகாரத்தில்,எதிர்க்கட்சிகள்,மீண்டும், முரண்டு!


மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீதான நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை, காங்கிரஸ் உள்பட முக்கிய எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கு முன்பு, பல முறை எழுப்பியுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இப்பிரச்னை, மேலும் தீவிரமாகி யுள்ளது.ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட, 22 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள், நேற்று, டில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், கூடினர்.


கோரிக்கை
அரை மணி நேர ஆலோசனைக்கு பின், தேர்தல் ஆணையத்திற்கு, சென்றனர். அங்கு, தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஐந்து ஓட்டுச் சாவடிகளில், ஓட்டு உறுதிச் சீட்டுகளை எண்ணி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளுடன், ஒப்பிட்டு, சரி பார்க்க வேண்டும்.அந்த குறிப்பிட்ட, ஐந்து ஓட்டுச் சாவடிகள் எவை என்பதை, ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாகவே முடிவு செய்ய வேண்டும்.அந்த ஐந்து ஓட்டுச் சாவடிகளில் பதிவான உறுதி சீட்டுகளை எண்ணி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும். அதன்பிறகு தான், அந்தத் தொகுதிக் குட்பட்ட மற்ற ஓட்டுகளை எண்ண வேண்டும்.


இந்த, ஐந்து சாவடிகளில் நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில், ஏதாவது முரண்பாடு ஏற்பட்டால், அந்த சட்டசபை தொகுதிக்குட் பட்ட, அனைத்து ஓட்டுகளையும் எண்ணி, ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பின்னர், நிருபர்களிடம் ஆந்திர முதல்வர்

சந்திரபாபு நாயுடு கூறியதாவது:மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மாற்றுவதற்கு முயற்சி நடக்கிறது. அதை தான் எதிர்க்கிறோம். மக்களின் தீர்ப்பை மாற்றக் கூடாது என, முன்னாள் தேர்தல் ஆணையர்களே கூறியுள்ளனர்.ஆனாலும், இவ் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்துமே, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


கணிப்பு
ரத்த மாதிரியை சோதனை செய்தால் போது மானது தான். ஆனால், சோதனை முடிவில் பிரச்னை இருப்பதாக தெரிந்தால், முழு உடலையும், ஸ்கேன் செய்ய வேண்டும். அதை தான் நாங்கள் கேட்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறுகையில்,''ஓட்டுப்பதிவு எந்திரங்களில், முறைகேடு செய்வதற்கு முன்னோட்டமாகவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக வெளியிடப்பட்டுள்ளன,'' என்றார்.காங்., மூத்த தலைவர், அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ''கடந்த ஒன்றரை மாதங்களாகவே, இப்பிரச்னை குறித்து, முறையிட்டு வருகிறோம். ''ஓட்டு உறுதி சீட்டு இயந்திரத்தை, தேர்தல் குறித்த நம்பகத்தன்மையை நிலைநாட்ட பயன்படுத்தாமல், வெறும் அலங்கார பொம்மையாக வைத்திருக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது,'' என்றார்.


மேலும், 50 சதவீத ஓட்டு உறுதி சீட்டுகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துஉள்ளது. இந்த நிலையில், ஒரு தொகுதியில் உள்ள, 100 சதவீத ஓட்டுகளையும் எண்ணி, ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற ரீதியில், எதிர்க்கட்சிகள் முரண்டு பிடித்து, கோரிக்கை மனுவை அளித்துள்ளன.


தேர்தல் ஆணையம் விளக்கம்
உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், போதிய பாதுகாப்பு இல்லாமல், நடைமுறையைப் பின்பற்றாமல், மாற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பான, வீடியோக்களும் வெளியாகி உள்ளன.


இதற்கு பதிலளித்து, தேர்தல் ஆணையம் கூறி உள்ளதாவது:ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப் பட்ட, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி., எனப்படும், ஓட்டு உறுதி இயந்திரங் களும், வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில், சீலிடப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டுள்ளன. அந்த அறைகளும் சீலிடப்பட்டுள்ளன.


இந்த அறைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய துணை

Advertisement

ராணுவப் படையினர்,இந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுஉள்ளனர். இதைத் தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதி களும், இந்த அறைகளின் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு இருக்கையில், ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மாற்றுப்படுவதாகக் கூறப் படுவது, ஆதார மில்லாத, பொய்யான குற்றச் சாட்டுகள். இவ்வாறு, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.இயந்திரங்களை மாற்றக் கூடாது

காங்., செய்தித் தொடர்பாளர், ராஜிவ் சுக்லா கூறியதாவது:பல்வேறு மாநிலங்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், பாது காப்பு அறைகளில் இருந்து மாற்றப் படுவதாக செய்திகள் வந்துள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பயன்படுத்தப்படாத, உபரியாக இருந்த இயந்திரங்களை மாற்றுவதாக, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஓட்டு எண்ணிக்கை, நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறு வதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, இவற்றை மாற்ற வேண்டிய அவசியம் என்ன. அப்படி மாற்றுவதாக இருந்தால், வேட்பாளரின் பிரதிநிதிகளின் ஒப்புதலைப் பெற்றே மாற்ற வேண்டும்.தேர்தல் ஆணையம், பாரபட்சம் இல்லாமல்; மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தாத வகையில் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பிரணாப் வருத்தம்
தேர்தல் ஆணையத்தின் பணியை பாராட்டிய, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, ஓட்டு பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக கூறப் படும் தகவல்களுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.'இந்தத் தேர்தல் மிகவும் சிறப்பாக நடந்துள்ளது. ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம், தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளே' என, நேற்று முன் தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், முகர்ஜி கூறியிருந்தார்.


இந்த நிலையில், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியுள்ளதாவது: மக்களின் தீர்ப்பை மாற்றும் வகையில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் திருத் தம் செய்ய, முயற்சிகள் நடப்பதாக, செய்திகள் வருகின்றன. மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங் கள், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது, அதன் கடமையாகும். ஜனநாயகத் தின் அடிப்படைக்கு சவால் விடுக்கும் வகையி லான சந்தேகங்களுக்கு இடம் அளித்து விடக் கூடாது. மக்களின் தீர்ப்பு புனிதமானது; அதை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-- நமது டில்லி நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
22-மே-201913:14:13 IST Report Abuse

திண்டுக்கல் சரவணன்தங்களுக்கு சாதகமாக முடிவு வரப்போவதில்லை என தெரிந்துகொண்ட காட்சிகள் ஊளை இடுகின்றன.இந்த கேள்விகளை பஞ்சாப் - மபி போன்ற காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் என் எழுப்பவில்லை

Rate this:
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
22-மே-201913:06:09 IST Report Abuse

Sundaram BhanumoorthyIn Chennai airport alone on a daily basis gold smugglers getting caught red handed.both male and female.either they are from.muslim.community or lankan tamils.why these so called preachers not correcting this mistake.all the people who get caught is only poor people's working as handlers (குருவி).

Rate this:
Being Justice - chennai ,இந்தியா
22-மே-201912:12:52 IST Report Abuse

Being Justice என்ன ஒரு வாரம் அதிகமா ஆகும் அவ்வளவு தானே? அல்லது இ.வி.எம் மெஷினின் எண்ணிக்கையை தெரியப்படுத்துங்கள். ஓட்டுச்சீட்டினையும் எண்ணுங்கள் அதனை ஒரு வாரம் கழித்து சொல்லுங்கள். ஆனால் இரண்டும் எண்ணிக்கை சரியாக வர வேண்டும். அதை விட்டு எங்களை நம்புங்கள் நாங்கள் ரொம்ப நல்லவர்கள் நியாயவாதிகள் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளாதீர்கள். தயாரிச்ச மெசின் எண்ணிக்கையும் அரசு வாங்கியதாக கூறப்படும் எண்ணிக்கையும் இருபது லட்சம் வித்தியாசப்படும் போது இந்த சந்தேகங்கள் அதிகரிக்குது.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-மே-201913:25:34 IST Report Abuse

ஆரூர் ரங்(வாட்ஸாப்பில் வந்தது ) இன்னும் ஒண்ணு பண்ணலாம் . வாக்குசாவடியில சி சி கேமிராவில் ஓட்டுபோட்டவங்க தலைகள் தெரியுதில்லையா? அதையெல்லாம் எண்ணி எத்தனை தலை இருக்கிறதுன்னு பாத்து அத்தனை ஒட்டு பதிவாயிருக்குதான்னு சரிபார்த்த பின்னாடி முடிவை அறிவிக்கலாம் அது சரியாயில்லைனா ஓட்டுபோட்டவங்ககிட்டயே நேரேபோய் யாருக்கு ஓட்டுபோட்டேங்கன்னு எழுதிவாங்கி எண்ணி மெஷினோட சரிபார்க்கலாமே . என்ன ஒரு பத்து வருச காலமாகும் அதுவரை எத்தனை வாக்காளர் . எத்தனை வேட்பாளர் உயிரோட இருப்பாங்களோ..தெரியாது . இன்னும் கூட போன சிவகங்கைதேர்தல் வழக்குக்கு தீர்ப்பே வரலையே அதனால நாடு மோசமாப்போச்சா என்ன? ...

Rate this:
Being Justice - chennai ,இந்தியா
27-மே-201912:39:16 IST Report Abuse

Being Justice கண்ணை மூடிட்டு தூங்கு தம்பி. ...

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X