பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநிலங்களுக்கு செல்லும் ஒட்டன்சத்திரம் முருங்கைக்காய்

Added : மே 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
வடமாநிலங்களுக்கு செல்லும்  ஒட்டன்சத்திரம் முருங்கைக்காய்

ஒட்டன்சத்திரம், வரத்து அதிகமாக இருப்பதால், வடமாநிலங்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், இடையகோட்டை, மூலனுார், மூலச்சத்திரம், சாலைப்புதுார் பகுதிகளில் முருங்கை அதிகமாக விளைவிக்கப் படுகிறது. தற்போது அவைகள் அறுவடை செய்யப்பட்டு வருவதால் விலை குறைந்துள்ளது. அவற்றை விற்பனைக்காக மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தினமும் 50 டன் முருங்கைக்காய் அனுப்பபடுகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60 க்கும் மேல் விற்றது. மார்ச்சில் ரூ.20 க்கு மேல் விற்றது. தற்போது கிலோ ரூ.14 க்கு மட்டுமே விற்பனையாகிறது. வியாபாரி ஒருவர் கூறுகையில்,''வடமாநிலங்களில் தற்போது முருங்கை விளைச்சல் இல்லாததால், இங்கிருந்து அனுப்பப்படுகிறது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-201909:50:32 IST Report Abuse
Bhaskaran அமெரிக்காவில் உள்ளதுபோல் frozen காய்கறிகளாக மாற்றி பாக்கெட்டுகளில் அடைத்துவைத்து விற்கலாமே விவசாயிகளுக்கு பலனளிக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X