பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஓய்வு போலீஸ் நல வாரியம் கமிஷனர், எஸ்.பி.,க்களுக்கு தலைவர் பதவி

Added : மே 21, 2019
Advertisement

சிவகங்கை, ஓய்வு போலீசாரின் குறைகளை களைய கமிஷனர், எஸ்.பி., தலைமையில் மாவட்டந்தோறும் ஓய்வு போலீசார் நல வாரியம்' அமைக்க தமிழக டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.போலீசார் ஓய்வு பெற்றதும் கிடைக்ககூடிய பணபலன்களை பெற கமிஷனர், எஸ்.பி., அலுவலகம் மூலம் ஆவணங்களை கருவூலகத்திற்கு அனுப்பினால் மட்டுமே உரிய முறையில் ஓய்வுக்கான பணபலன் கிடைக்கும்.ஓய்வு போலீஸ் நல வாரியம்இவ் அலுவலகங்களில் புகார் தெரிவித்தும், ஓய்வு போலீசாரின் ஆவணங்கள் கருவூலத்திற்கு செல்ல தாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னையை தவிர்க்க, அந்தந்த மாவட்டங்களில் ஓய்வு போலீசார் நல வாரியம்' அமைத்து ஓய்வு போலீசாரின் குறைகளை அங்கேயே தீர்க்க வேண்டும் என டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.வாரிய நிர்வாகிகள் யார்இந்த வாரியத்தின் தலைவராக கமிஷனர், எஸ்.பி., ஆகியோர் தேர்வு செய்யப்படுவர். உறுப்பினர்களாக பணிபுரியும் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமை காவலர் உட்பட 6 பேர்களும், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமை காவலர், போலீஸ் ஆகியோர் வாரியத்தில் இடம் பெறுவர். இதில் கட்டாயம் இரு பெண் போலீஸ் இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியில் எஸ்.பி., அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓய்வு போலீசாரின் குறைகளை கமிஷனர், எஸ்.பி., அலுவலகங்களில் கண்டு கொள்வதில்லை என்ற அதிருப்தி அவர்களிடம் நிலவுகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் ஓய்வு போலீசார் தேர்தல் பணியில் ஆர்வம் செலுத்தவில்லை. இது குறித்து டி.ஜி.பி.,க்கு புகார் சென்றதால், வாரியம் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X