பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஓட்டு எண்ணிக்கை: நடைமுறை என்ன

சென்னை, ஓட்டு எண்ணிக்கை நடைமுறை களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.அதன் விபரம்:

ஓட்டு,எண்ணிக்கை, நடைமுறை,என்ன


* நாளை காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டு களை எண்ணும் பணி துவங்கும். ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிக்குரிய ஓட்டு எண்ணும் மையத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.

அங்கு தபால் ஓட்டு எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்கு பின் ஓட்டுப்பதிவு இயந்திரத் தில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை துவங்கும். மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கான

மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு துவங்கும்


* இடைத்தேர்தல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளில் தபால் ஓட்டுகள் எண்ணிய பின் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை காலை 8:30 மணிக்கு துவங்கும்.ஓட்டுப்பதிவு இயந் திரத்தில் உள்ள கட்டுப்பாட்டு கருவியில் பேட்டரி இயங்காவிட்டால் மாற்று பேட்டரி பொருத்தப்பட்டு எண்ணிக்கை தொடரும்.

* கட்டுப்பாட்டு கருவியிலிருந்து முடிவுகளை பெற முடியாத நிலையில் அந்த இயந்திரம் தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும். மற்ற ஓட்டுபதிவு இயந்திரங்களின் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் அந்த இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்


* வெற்றி ஓட்டு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப் பட்ட தபால் ஓட்டுகளை விட குறைவாக இருந்தால்

Advertisement

அந்த தபால் ஓட்டுகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும்


* ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஓட்டு எண்ணிக்கை இறுதி சுற்றின்போது ஓட்டு பதிவு இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகளை எண்ணும் பணிக்காக இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒப்புகை சீட்டு எண்ணு வதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் அவை எண்ணப்படும்.இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Ramesh - chennai,இந்தியா
24-மே-201914:51:11 IST Report Abuse

M.Rameshதாங்கள் சொல்லுவது சரியே மேலும் தேர்தல் நடந்த முதல் நாள் காலை 9. 00 மணி முதல் மறுநாள் இரவு 12 .00. வரை போக்கு குவரத்து இல்லாமல் சிலர் அங்கேயே தங்கிவிட்டனர் மேற்படி காரணத்தினால்தனோ அரசு அலுவலர்கள் தேர்தல் பணிக்கு வர தயங்குகின்றனர் இதில் பெண் அலுவலர்கள் ரொம்பவும் அவதி பட்டனர் .

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
22-மே-201921:43:32 IST Report Abuse

Poongavoor RaghupathyAfter worked very hard EC is accused by non winning Parties' Leaders. If Parties are unable to win what can EC do for their winning. If Opposition would be winning EC will be praised lavishly. EC is doing their difficult thankless job. The loosing Parties must blame themselves rather than finding fault with EVMs. Poor Rahul daily shouted Modi is a thief to get only a few seats for Congress. Rahul has helped Modi very much to get a majority of seats. Rahul has exposed his immaturity fully to the Nation in this election.Winking, hugging, shouting Modi is a thief by Rahul has paid dividends to Modi. Poor Rahul will get ditched by Stalin also sooner or later.

Rate this:
Senkolselvan - Coimbatore,இந்தியா
22-மே-201912:09:32 IST Report Abuse

Senkolselvanதேர்தல் ஆரம்பிச்ச நாள் முதல் மோடி மோடி னு கூவுனானுக.. அப்புறம் பணமதிப்பிழப்பு GST அப்பிடின்னு புலம்புனானுக.. அப்புறம் EVM மெஷினை குறைகூறுனானுக...அதுக்கப்புறம் ஒப்புகை சீட்டு ஒப்புகை சீட்டுன்னு ஒப்பாரி வச்சானுக ...இனி என்ன சொல்லி புலம்ப போறாங்களோ ??? பாவம் அரசியல் வியாதிகள் ...

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X