அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தே.மு.தி.க. - பா.ம.க. கலக்கம்

சென்னை: தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து தே.மு.தி.க. - பா.ம.க.வினர் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

தே.மு.தி.க., பா.ம.க., கலக்கம், அ.தி.மு.க. கூட்டணி




அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ம.க. - தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தன. இதில்

பா.ம.க.விற்கு ஏழு லோக்சபா தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தே.மு.தி.க.விற்கு நான்கு லோக்சபா தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டன. கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்றால் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு கட்சிகளும் உள்ளன.




ஆனால் கருத்து கணிப்பு முடிவுகள் இரண்டுகட்சிகளுக்கும் சாதகமாக இல்லை.ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க.விற்கு தர்மபுரியும்,நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.விற்கு கள்ளக்குறிச்சியும் கிடைத்தாலே பெரிய விஷயம் என கணிப்புகளில் கூறப்படுகிறது.

Advertisement

இது இரு கட்சி தலைமைகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தேர்தல் முடிவுகள் பாதகம் ஆகும்பட்சத்தில் இரண்டு கட்சிகளிலும் பூகம்பம் வெடிக்க வாய்ப்புள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
05-ஜூன்-201911:08:23 IST Report Abuse

Indhuindianதிரு விஜய காந்த் அரசியலுக்கு லாயக்கில்லை. இப்போது அவருடைய உடல் நிலை வேறு சரியில்லை. கட்சியை கலைப்பதே சால சிறந்தது. ப ம க ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத கட்சி. ஜாதிக்கு முக்கியம் கொடுத்து தன்னுடைய குடும்பத்தை முன்னிறுத்தி, எந்த வித கொள்கையோ கட்டுப்பாடோ இல்லாத கட்சி. என்னுடைய குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்கு வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றார். சவுக்குடன் ஆயிரக்கணக்கானோர் காத்து கொண்டு இருக்கின்றனர். கொள்கை அடிப்படையில் இல்லாமல், தன்னுடைய மகனை எப்படியாவது மத்திய மந்திரி சபையில் அமைச்சராக வேண்டும் என்று அதற்காக என்னென்னவோ செய்தார் வெற்றியும் கொண்டார் அவருடைய மகன் மத்திய மந்திரி ஆகி ஏகப்பட்ட வூசல் செய்து இப்போது சிபிஐ விசாரணையில் இருக்கிறார். திராவிட கட்சிகளும் அவரை வூறுகாயாகயாகத்தான் வைத்துக்கொள்கிறார்கள் அவர் கூட்டணி வைக்காதே கட்சியே இல்லை. அப்படி ஒரு அரசியல் நடத்துவதை விட சந்நியாசம் வாங்கிக்கொள்வதே மேல்.

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
29-மே-201903:42:15 IST Report Abuse

meenakshisundaramகட்சிகளை விட்டு விட்டு இவர்களின் தொண்டர்கள் அதிமுகவில் உடனடியாக இணைவது நல்லது .உள்ளாட்சி தேர்தலில் 'தீய 'சக்திகள் வெற்றி பெறாமல் தடுப்பதே இவர்கள் செய்ய வேண்டிய பிராயச்சித்தம்.

Rate this:
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
28-மே-201911:17:24 IST Report Abuse

Rajaiah Samuel Muthiahrajகாஞ்சிபுரத்தில் உங்கள் கட்சி பிரமுகர் நடத்தியுள்ள சாலை ஆக்கிரமிப்பு பொது இட ஆக்கிரமிப்பு மற்றும் விதிமீறல் கட்டடம் எழுப்புதல் ஆகியன எப்பொழுது உங்களால் அப்புறப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் உங்கள் கட்சி மீள எழும்பிடமுடியும்

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X