பொது செய்தி

தமிழ்நாடு

தூர்வார உதவிய மூதாட்டிக்கு உண்டியல் சேமிப்பை வழங்கிய மாணவர்கள்

Updated : மே 22, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
தூர்வார உதவிய மூதாட்டிக்கு உண்டியல் சேமிப்பை வழங்கிய மாணவர்கள்

புதுக்கோட்டை, நீர்நிலைகளை துார்வார 100 நாள் வேலை திட்ட ஊதியம் 10 ஆயிரம் ரூபாயை வழங்கிய மூதாட்டி ராஜம்மாளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து பள்ளி மாணவர்கள் இருவர் தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை துார்வாரும் பணிக்கு வழங்கியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதையடுத்து கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் இணைந்து அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை சொந்த செலவில் துார்வாரி வருகின்றனர்.அம்புலி ஆற்றில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்படாமல் உள்ள அணையில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைப்பதுடன் அப்பகுதியில் உள்ள குளங்களையும் துார்வாரி வருகின்றனர்.இப்பணிக்கு உதவும் பொருட்டு ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி தன் பேரக் குழந்தைகளின் கல்விக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாயை அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராஜம்மாள் 62 வழங்கினார்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று ராஜம்மாள் அலைபேசி எண்ணுடன் செய்தி வெளியானது. நேற்று அதிகாலை துவங்கி இரவு வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் ராஜம்மாளை பாராட்டினர்.ராஜம்மாளை பாராட்டி அப்பகுதி இளைஞர்கள் கொத்தமங்கலம் கடை வீதியில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.பாட்டியின் செயலைப் பார்த்த ஒரு சிறுவனும் சிறுமியும் தங்களின் உண்டியல் சேமிப்பு பணத்தை துார்வாரும் பணிக்கு கொடுத்து அசத்தி உள்ளனர்.கொத்தமங்கலம் திருஞானம் - வசந்தி தம்பதியின் மகன் ஐந்தாம் வகுப்பு மாணவன் சக்திவேல் 10. இவர் தன் உண்டியலை துார்வாரும் குழு இளைஞர்களை நேற்று வீட்டிற்கு வரவழைத்து கொடுத்தார். உண்டியலை உடைத்து எண்ணியபோது 2668 ரூபாய் இருந்தது.அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் - லதா தம்பதியின் மகளான நான்காம் வகுப்பு மாணவி அனுஷ்கா 9, பணம் சேமித்து வைத்திருந்த உண்டியலை இளைஞர்களிடம் வழங்கினார். அந்த உண்டியலில் 2313 ரூபாய் இருந்தது. சிறுவர் சிறுமியரை இளைஞர்கள் பாராட்டினர்.ராஜம்மாள் கூறியதாவது:எங்கள் பகுதியில் சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இப்பகுதியில் 1000 அடிக்கு ஆழ் குழாய் அமைத்தும் தண்ணீர் இல்லை காரணம் ஆறு, குளம், நீர் நிலைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.இப்பகுதி இளைஞர்கள் ஆறு குளங்களை துார்வாரி வருவதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் என் மகன் ஆனந்த் கூறினான்.இதைக் கேட்ட நான் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பாதித்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாயை துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் வழங்கினேன்.இங்குள்ள ஆறு, குளங்களை துார்வாரி தண்ணீர் சேமித்தால் என் பேரன்களும் இந்த தண்ணீரை பயன்படுத்துவர் என்பதற்காகவே சேமிப்பு பணத்தை வழங்கினேன்.இந்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளிவந்ததை அடுத்து பல பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசியல்வாதிகள் நடிகர்கள் என பலர் பாராட்டி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
இதேபோல அனைத்து பகுதிகளிலும் ஆறு, குளங்களை துார்வார இளைஞர்கள் முன்வர வேண்டும். இதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது.அரசு அரசியல்வாதிகள் செய்ய முன்வராத இந்த துார்வாரும் பணியில் ஈடுபட முன்வரும் அனைவரும் என் பேரன்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் உற்சாகம்
நிதி வழங்கிய மாணவர்கள் கூறியதாவது:எங்கள் பகுதியில் குடிக்கவும் விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் நிலத்தடி நீரை சேமித்தால் தான் வரும் காலங்களில் தண்ணீர் கிடைக்கும். இப்போது எங்கள் பகுதியில் ஆறு குளம் வாய்க்கால்களை சீரமைக்கின்றனர்.இனி மழை பெய்தால் தண்ணீர் தேங்கும். அதனால் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை நிலத்தடி நீர் நீர்நிலை பாதுகாப்புக்காக கொடுத்திருக்கிறோம். தண்ணீரை சேமிக்க எங்கள் கையில் இருந்ததை கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


'அச்சம் நீங்கியது'
கொத்தமங்கலம் இளைஞர்கள் கூறியதாவது:இப்பகுதியில் ஆறு, குளம் சீரமைக்கும் பணி துவங்கும் போது பணம் கிடைக்காமல் வேலை பாதியில் நின்று விடுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் பணி தொடங்கியதும் பொருளாதார உதவி மற்றும் வாகன உதவி என பலரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.இப்போது ராஜம்மாள் பாட்டி பள்ளி சிறுவர்கள் உண்டியல் பணத்தையும் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல அடுத்தடுத்த கிராமங்களிலும் நிலத்தடி நீர் பாதுகாப்பு பணியை இளைஞர்கள் தொடங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-மே-201914:17:55 IST Report Abuse
மலரின் மகள் கிளவியும் குழவியும் தெய்வத்தின் தெய்வீகம் நிலைத்திருக்க மண்ணில் வாழும் தேவதைகள். அவரவர்கள் சக்திக்கு தகுந்த படி சமூக சேவை பிறருக்கு உதவிகள் செய்தல்வேண்டும். மிக பலர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் தொடர்ந்து. நாம் செய்கின்ற சேவைகள் ஏழைகளுக்கும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஜீவராச்சிகளுக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். மிக சில அரசியல் பின்புலம் கொண்டு பணத்தை களவாடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை மக்கள் ஒதுக்கவேணும். உங்களின் செய்தியை படிக்கும் பொது நாம் செய்கின்ற அறப்பணிகள் உதவி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
v sampath - CHENNAI,இந்தியா
22-மே-201910:15:39 IST Report Abuse
v sampath எல்லோரும் தண்ணீரின் முக்கியத்துவத்தை அறியவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து அதை தீர்க்கும் வழியையும் ராஜம்மாள் மற்றும் மாணவர்கள் உணர்த்தி விட்டனர்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-201908:42:22 IST Report Abuse
Bhaskaran அரசு அதிகாரிகள் தூக்குபோட்டுகொண்டுசாகணும் வரியும் கொடுத்து மக்கள் செலவிலேயே தூர்வாரவேண்டும் என்றால் அரசு எதுக்காக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X