பொது செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் நினைவு தினம்: காங்., அமைதி ஊர்வலம்

Added : மே 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் 28வது நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் நேற்று தமிழக காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று ராஜிவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜிவ் உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் உட்பட காங்கிரசார் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.சென்னை அண்ணாசாலை வெலிங்டன் பிளாசாவில் இருந்து சத்தியமூர்த்தி பவனுக்கு அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் ராஜிவ் புகழ் பாடும் ரதயாத்திரை வாகனமும் இடம்பெற்றது.இதில் பங்கேற்ற காங்கிரசார் கறுப்புச்சட்டை கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். சத்தியமூர்த்தி பவனில் நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் இசையஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.அழகிரி பேசுகையில் ''உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு பேச்சு வாயிலாக தீர்வு கண்டவர் ராஜிவ். நாட்டில் உள்ள எந்த பிரச்னையையும் கண்டு காங்கிரசார் ஓட தேவையில்லை. அவற்றை எதிர்கொண்டு தீர்வு காண்போம். அப்போது தான் தமிழகத்தில் தேசிய கட்சி வளரும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-201909:49:06 IST Report Abuse
Bhaskaran எந்தெந்த நாடுகளின் பிரச்னையெல்லாம் தீர்த்தவர்னு கொஞ்சம். விளாவாரியாக விளக்குறீங்களா அழகிரி ஐயா புளுகுகிறதுக்கு ஒரு அளவுவேனாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X