பதிவு செய்த நாள் :
'லோக்சபா தேர்தல் பிரசாரம்
புனித யாத்திரையாக அமைந்தது'

புதுடில்லி,: ''லோக்சபா தேர்தல் பிரசாரம் எனக்கு புனித யாத்திரையாக அமைந்தது'' என மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

'லோக்சபா, தேர்தல், பிரசாரம், புனித யாத்திரையாக ,அமைந்தது'லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ளது.தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும் 'பிரதமர் மோடி மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பார்' என தெரிவித்து உள்ளன.இந்நிலையில் டில்லியில் பா.ஜ. தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களை பிரதமர் சந்தித்து பேசினார்.

இதில் பா.ஜ.வை சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.


அப்போதுபிரதமர் மோடி கூறியதாவது:


நான் பல தேர்தல்களை பார்த்துள்ளேன். ஆனால் இந்த தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த லோக்சபா தேர்தலுக்காக நான் மேற்கொண்ட பிரசாரம் புனித யாத்திரை மேற்கொண்டது போல் இருந்தது.கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடன் இணைந்து பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


கூட்டணிகட்சிகளுக்கு விருந்துஇதன்பின் பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியின் தலைவர்களுக்கு பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா விருந்தளித்தார். விருந்தில் பாஜ தலைவர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம்,

Advertisement

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


இதன் பின்'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா வெளியிட்ட பதிவில் 'மோடி அரசில் இடம் பெற்ற அமைச்சர் கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக உழைத்து பல சாதனைகளை செய்துள்ளனர். புதிய இந்தியாவை உருவாக்கும் இந்த முயற்சி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் தொடரும்' என கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN , Bangalore - BANGALORE,,இந்தியா
22-மே-201919:17:07 IST Report Abuse

RAMAKRISHNAN NATESAN  , Bangalore புனித யாத்திரை முடிந்து ஆட்சிக்கு ஒருவேளை வந்தால் புனித மக்களுக்கு அப்பு கார்பொரேட் காரன்னுக்கு GOLD மெடல்

Rate this:
AMHussain - pudukkottai ,இந்தியா
22-மே-201917:32:15 IST Report Abuse

AMHussainTherdal pracharam nadanthathu munbu, punitha yarthrai cheidadu pinbu. Irandayum potty kuzappikkolla vame.

Rate this:
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
22-மே-201909:16:49 IST Report Abuse

Swaminathan Nathதேசத்தை நேசிக்கும் தலைவர் நமக்கு கிடைத்தது மகிழ்ச்சி, மற்றவர்கள் கொள்ளை அடிக்க மட்டும் வருகிறார்கள், மோடி நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன், வாழ்க பாரதம்,

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X