பொது செய்தி

தமிழ்நாடு

'ஓவர் லோடு' வாகனங்கள்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Added : மே 21, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் அதிக உயரத்தில் 'ஓவர் லோடு' ஏற்றி வரும் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் குறிப்பிடத்தக்க 'பை பாஸ்' ரோடுகள், ரிங் ரோடுகள் இல்லாததால், நெடுஞ்சாலைகளில் வரும் சரக்கு வாகனங்கள், நகருக்குள் நுழைந்தே செல்கின்றன.
அவற்றால், போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில லாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பாரத்தை ஏற்றி வருகின்றன.வாகனத்தின் அளவை விட, அதிக அகலம், உயரத்தில் பாரம் ஏற்றி வரப்படுகிறது. இப்படி அதிக உயரத்துடன் வரும் வாகனங்கள், ரோட்டின் குறுக்கே எடுத்துச் செல்லப்படும் மின்கம்பிகளிலும், மரக்கிளைகளிலும் உரசுகின்றன.சில சமயம், மரக்கிளைகளை உடைத்து வீழ்த்தியும், மின்கம்பிகளை அறுத்தும் விடுகின்றன. இதனால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, 'ஓவர் லோடு' வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X