பொது செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி

Added : மே 21, 2019
Advertisement

சிவகங்கை : முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் அலுவலக மேலாளர் (பொது) கண்ணன், உட்பட அனைத்து துறை ஊழியர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., அலுவலகத்தில் ஜெயச்சந்திரன் எஸ்.பி., தலைமையில் கூடுதல் எஸ்.பி., மங்களேஸ்வரன், எஸ்.பி., நேர்முக உதவியாளர் சசிரேகா உட்பட அமைச்சுப்பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர். சிவகங்கையில் காங்., கட்சி சார்பில் ராஜிவ் படத்திற்கு கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மகளிர் காங்., மாநில தலைவர் ஜான்சிராணி, மகளிரணி ஸ்ரீவித்யா, மாவட்ட தலைவர் ஏலம்மாள், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சண்முகராஜன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X