பொது செய்தி

தமிழ்நாடு

தென் மாநில மின் உற்பத்தி: முதலிடத்தில் தமிழகம்

Added : மே 21, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை, தென் மாநிலங்களில் அதிக அளவாக தமிழகத்தில் 2019 - 20ல் அனல் நீர் அணு மின் நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 9,131 கோடி யூனிட்களாக இருக்கும் என மத்திய மின்சார ஆணையம் மதிப்பிட்டுள்ளது.தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள்; 2,307 மெகா வாட் திறனில் 47 நீர் மின் நிலையங்கள்; 516 மெகா வாட் திறனில் நான்கு எரிவாயு மின் நிலையங்கள்

சென்னை, தென் மாநிலங்களில் அதிக அளவாக தமிழகத்தில் 2019 - 20ல் அனல் நீர் அணு மின் நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 9,131 கோடி யூனிட்களாக இருக்கும் என மத்திய மின்சார ஆணையம் மதிப்பிட்டுள்ளது.தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள்; 2,307 மெகா வாட் திறனில் 47 நீர் மின் நிலையங்கள்; 516 மெகா வாட் திறனில் நான்கு எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன.திருவள்ளூர் மாவட்டம் - வல்லுார் நெய்வேலி; துாத்துக்குடி நெல்லையில் 7,330 மெகா வாட் திறனில் அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன.மத்திய மின்சாரம் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் நடப்பு 2019 - 20ம் ஆண்டில் அனல் அணு எரிவாயு மின் நிலையங்கள் வாயிலாக எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாகும் என்பதை மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.அதன்படி தமிழகம் 9,131 கோடி யூனிட்கள் உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது.இதைதொடர்ந்து ஆந்திரா 6,911; கர்நாடகா 5,336; தெலுங்கானா 5,108; கேரளா 604; புதுச்சேரியில் 22 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-201909:47:05 IST Report Abuse
Bhaskaran கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தியாச்சு இனி தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் மின்சாரம் கிடைக்கும் வீட்டுக்கு முறைவைத்து நிறுத்தப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X