பதிவு செய்த நாள் :
பிரதமர் ,மோடி, ராகுல்,கவுன்ட் டவுன்,ஆரம்பம்

அடுத்த பிரதமர், மோடியா அல்லது ராகுலா என்பதற்கான, 'கவுன்ட் டவுன்' நாடு முழுவதும், நேற்று ஆரம்பமானது; நாளை முடிவு தெரிந்து விடும்.
நாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. லோக்சபா தேர்தலோடு, ஆந்திரா, ஒடிசா,அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில்,சட்டசபை பொதுத்தேர்தலும் நடந்தது.தமிழகத்தில், காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

அமைதி


பணப் பட்டுவாடா விவகாரம் காரணமாக, வேலுார் லோக்சபா தொகுதிக்கு மட்டும், தேர்தல் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள, 542 லோக்சபா தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில வன்முறை சம்பவங்கள் தவிர, அனைத்து பகுதிகளிலும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இரு மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த, தேர்தல் திருவிழா, நிறைவுப் பகுதியை எட்டிஉள்ளது.
அனைத்து லோக்சபா தொகுதிகளிலும், ஓட்டுகள் பதிவான இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில், 'சீல்' இடப்பட்ட அறைக்குள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு:


அந்த அறையை சுற்றி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, நாளை நடக்கிறது. இதையடுத்து, இந்த தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று,

மோடி, மீண்டும் பிரதமர் ஆவாரா அல்லது காங்கிரஸ் வெற்றி பெற்று, பிரதமர் பதவியை ராகுல் பிடிப்பாரா என்பதற்கான, 'கவுன்ட் டவுன்' நேற்று ஆரம்பமாகி உள்ளது.
அதனால், பா.ஜ., - காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, தேர்தல் களத்தில் குதித்த, மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், பெரிய எதிர்பார்ப்புடன், தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து உள்ளனர்.இந்நிலையில், ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த, 19ம் தேதி மாலை வெளியாகின. பெரும்பாலான கருத்து கணிப்புகள், பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறியுள்ளன.
இது, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும், மோடி பிரதமர் ஆவார் என, அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கையுடன் வலம் வர துவங்கியுள்ளனர். அதேநேரத்தில், கருத்துகணிப்பு முடிவுகளை, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஏற்க வில்லை. பா.ஜ.,விற்கு

பெரும்பான்மை கிடைக்காது என்று நம்பும் காங்கிரஸ், மாநில கட்சிகளுடன் இணைந்து, ராகுலை பிரதமராக்க, முயற்சிகளை துவக்கி உள்ளது.
பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளுக்கு, பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி ஆட்சி ஏற்படும். அந்த நேரத்தில், பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மாயாவதி, மம்தா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட, சில மாநில கட்சி தலைவர்களும் காத்திருக்கின்றனர்.யார் ஆசை நிறைவேற போகிறது; நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது, நாளை தெரிந்து விடும்.
அனைத்து தொகுதிகளிலும், நாளை காலை, 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. காலை, 8:30 மணிக்கு மேல், கட்சிகளின் முன்னணி நிலவரம் தெரிய வரும். பகல், 12:00 மணியளவில், எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்; யார் பிரதமர் என்பதும் தெளிவாகி விடும். முழு முடிவுகள் வெளியாக, இரவாகி விடும்.

கோவில்களை சுற்றும் மந்திரிகள்!


லோக்சபா தேர்தல் முடிவுகள், நாளை வெளியாக உள்ள நிலையில், கோடிக்கணக்கில் பணம் செலவழித்த வேட்பாளர்கள், தங்கள் வெற்றிக்காக, கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஜெயிக்கப் போவது யார் என, தொகுதி வாரியாக, 'பெட்டிங்' என்ற, சூதாட்டமும் களைகட்டி உள்ளது.
பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளனர். தமிழகம் உட்பட சில மாநிலங்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து உள்ளனர்.
பலர், கடன் வாங்கியும், சொத்துக்களை அடமானம் வைத்தும், பணம் செலவழித்துஉள்ளனர். அவர்கள் அனைவரும், தங்கள் வெற்றிக்காக, கோவில்களில்வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில், இடைத்தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், அ.தி.மு.க., ஆட்சி பறிபோகும். இதனால், அதிக தொகுதி களில் வெற்றி கிடைக்கவும், பதவியில் நீடிக்கவும், அமைச்சர்கள் பலரும் கோவில்களை சுற்றி வருகின்றனர்.
சிலர், தங்கள் வீடுகளில், சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர்.இவர்கள் கோவில் கோவிலாக சுற்றி வரும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும், யார் ஜெயிப்பார் என, லட்சக்கணக்கில், 'பெட்டிங்' கட்டும் சூதாட்டமும், கட்சியினர் மத்தியில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.


Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
22-மே-201921:23:12 IST Report Abuse

Raghuraman Narayananராகுல் நிச்சயமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அப்பாடா பொழச்சோம்.

Rate this:
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
22-மே-201920:07:26 IST Report Abuse

Chowkidar ModikumarEVM பெட்டிகள் டிராக்டரில் கடத்தப்படுகின்றன. காரில் கடத்தப்படுகின்றன. காலையில் சுப்ரீம் கோர்ட் காறி துப்பியபின் 21 எதிரிகளும் இவ்வாறாக மாறி மாறி புலம்ப ஆரம்பித்து விட்டனர் ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கும் தனித்தனி சீரியல் எண் உண்டு, அந்தந்த தொகுதி வேட்பாளர்களிடம் அவரின் வாக்குப்பதிவாகும் இயந்திரத்தின் எண் கொடுக்கப்பட்டுள்ளது.. கட்சி ஏஜண்டுகளின் கையொப்பமும் சீலில் உள்ளது. பின் எப்படி பெட்டி மாற்றப்படும்..?? மேலும் ஒரு தொகுதிக்கு குறைந்தது 2000 பெட்டிகள் இருக்கும்... அதில் எந்த பூத்தில் எவ்வளவு ஓட்டு பதிவானது என்ற விவரமும் அனைத்து கட்சியிகளின் பூத் ஏஜென்டிடம் இருக்கும்... பெட்டிகள் வரிசை எண்படி ஸ்டிராங் ரூமில் வைத்து, கதவுகள் பூட்டப்பட்டு சீல் வைத்து 3 அடுக்கு போலிஸ்/CSIF பாதுகாப்பில் உள்ளது. போதாதற்கு கட்சிகளின் ஏஜெண்ட்களும் காவலுக்கு அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் பெட்டி மாற்றுவது என்பது இன்றைய காலகட்டத்தில் செய்ய முடியாத காரியம் தோல்வி பயத்தில் இப்பவே எதிர்க்கட்சிகள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க

Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
22-மே-201917:03:08 IST Report Abuse

sankarதலைப்பை மாத்துங்க மோடியா கட்காரியான்னு போடுங்க அதான் கொஞ்சம் பொருத்தமா இருக்கும்

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X