பதிவு செய்த நாள் :
20 எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல்
கர்நாடகா அரசுக்கு ஆபத்து

பெங்களூரு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

20 எம்.எல்.ஏ.க்கள், மிரட்டல், கர்நாடகா, அரசுக்கு ,ஆபத்துகர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த. - காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்களும் மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.


எதிர்க்கட்சியான பா.ஜ.வுக்கு 104 எம்.எல்.ஏ.க் கள் உள்ளனர்.ஆளும் கூட்டணியில் உள்ள இரு கட்சியினருக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இரு கட்சி

தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் சிலரும் கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

'சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. அதிக இடங்களில் வெற்றி பெறும்' என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித் தன.இதனால் அமைச்சர் பதவியை எதிர் பார்த்து காத்திருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிப் படையாக கருத்து தெரிவிக்க துவங்கி உள்ளனர்.


காங். மூத்த தலைவரும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ரோஷன் பெய்க் கர்நாடக மாநில காங். தலைவர்களை கடுமையாக விமர்சித்துள் ளார். முன்னாள் முதல்வரான சித்தராமையாவை 'திமிர் பிடித்தவர்' என்றும் கட்சி பொதுச் செயலர் வேணுகோபாலை'பபூன்'என்றும் கூறியுள்ளார்.


காங். தலைவர்கள் முஸ்லிம்களை வெறும் ஓட்டு வங்கியாக கருதுவதாகவும் முஸ்லிம்கள் தேவைப்பட்டால் பா.ஜ.வுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இவருக்கு

Advertisement

காங்கிரசைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க் கள் ஆதரவு உள்ளதாகவுதகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால் லோக்சபா தேர்தலில் காங். - ம.ஜ.த. கூட்டணி தோல்வி அடைந்தால் இவர் கள் 20 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து குமாரசாமி அரசைகவிழ்க்க திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதற்கிடையே காங். தலைவர்களை விமர் சித் தது குறித்து விளக்கம் கேட்டு ரோஷன் பெய்க் கிற்கு கட்சி மேலிடம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
22-மே-201916:51:29 IST Report Abuse

 N.Purushothamanபா.ஜ வெற்றி பெற்றுவிட்டால் அரைகுறையாக வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க நேரிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-மே-201915:03:21 IST Report Abuse

Malick Rajaகாலம் உருள்வது என்பதன் உண்மைத்தன்மைதான் இதுபோன்ற சம்பவங்கள் .. அதில் பிஜேபிக்கு ஒன்னும் விதிவிலக்கில்லை அதற்கும் தக்க நேரம் வரும் .. இரவும் பகலும் போல அதிகாரம் மாறிக்கொண்டே இருக்கும் நிலைத்திருப்பதே இல்லை ..

Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
22-மே-201910:57:50 IST Report Abuse

Ambika. Kபழனிசாமி சேகர் பெங்களூரு என்பதற்க்கோ கர்நாடக என்பதற்க்கோ அர்த்தம் தெரியாதவர் என்று நினைக்கிறேன். 2018 தேர்தலுக்கு முன் சித்துவை அவர் ஜாதியை சொல்லி திட்டியவர் நம் தேவேகௌடா

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X