அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: அ.தி.மு.க., கலக்கம்

சென்னை, இடைத்தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லாததால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுமோ என முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலக்கம் அடைந்துள்ளனர்.

இடைத்தேர்தல், கருத்துக்கணிப்பு,அ.தி.மு.க., கலக்கம்தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 114; தி.மு.க.விற்கு 88; அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு எட்டு, முஸ்லிம் லீக்கிற்கு ஒன்று, ஒரு சுயேச்சை என 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகள் காலியாக இருந்தன.இந்த 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களில்

அறந்தாங்கி - ரத்தினசபாபதி விருத்தாசலம் - கலைச்செல்வன் கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர்.


அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களாக உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க.விற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.இவர்களை தவிர்த்து அ.தி.மு.க. பெரும்பான்மை பெற குறைந்தது ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில் ஆட்சிக்கு ஆபத்து நிச்சயம். எனவே லோக்சபாதேர்தலைவிட இடைத்தேர்தலில் அ.தி.மு.க.கவனம் செலுத்தியது.தேர்தல் முடிந்த நிலையில் 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வினர் உள்ளனர். இடைத்தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரும்; ஆட்சி தொடர்ந்துநீடிக்கும் என்பதே முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் திடமான நம்பிக்கையாக உள்ளது.இந்த சூழ்நிலையில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் லோக்சபா

Advertisement

தேர்தலில் தி.மு.க.விற்கு 25 முதல்32 தொகுதி கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரி விக்கப்பட்டு உள்ளது. அதேபோல இடைத்தேர்தலிலும் தி.மு.க.விற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் அ.தி.மு.க. விற்கு ஐந்துக்கும் குறைவான இடங்களே கிடைக்கலாம் என்றும் சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இது முதல்வர் துணை முதல் வர் ஆகியோரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஆட்சியை தக்கவைக்க மேற்கொள்ள வேண் டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அ.தி.மு.க.வில் ஆலோசனை நடந்து வருகிறது.


Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-201920:12:32 IST Report Abuse

rmAIADMK is used as vote bank for BJP. EPS and OPS acted as slave to help BJP to plant their root in TN.They never used this chance given to them because of Amma ,to do some thing for TN people.Sterilitie, kaja ,salem road and security of women ,farmer issue, nothing was handled properly by EPS and OPS group.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
22-மே-201916:41:03 IST Report Abuse

dandyநாங்கள் இன்னும் 100 வருடங்களின்பி ன்னரும் "ஆசியாவில்" ஓலைக்குடிசையில் அதிகம் வாழும் மக்களாகவே இருப்போம்குப்பனுக்கும் ..சுப்பனுக்கும் கோவணம் மட்டுமே மிச்சம்

Rate this:
RAMESH - CHENNAI,இந்தியா
22-மே-201916:12:07 IST Report Abuse

RAMESHஆசை படலாம் பட் பேராசை படக்கூடாது ......

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X