பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கழிவுகள் வெளியேற்றம் மருத்துவமனைகளில் தீவிர ஆய்வு

Added : மே 21, 2019
Advertisement

சென்னை, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உயிரி கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா என்பதை மருத்துவ சேவைகள் இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் 'தமிழகத்தில் செயல்படும் 51 அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் உட்பட 365 மருத்துவமனைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை. மேலும் 715 மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கான முறையான அங்கீகாரம் பெறவில்லை. இதில் 95 மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன' என கூறப்பட்டுள்ளது.உயிரி கழிவுகளை முறையாக அகற்றும் நடைமுறைகள் மருத்துவமனைகளில் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதார துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.பசுமை தீர்ப்பாய உத்தரவை தொடர்ந்து சென்னை உட்பட மாநில முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் 'கிளினிக்' மற்றும் மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பல மருத்துவமனைகள் பதிவு உரிமம் இன்றி செயல்படுகின்றன. அவற்றை முறைப்படுத்தி உரிமம் வழங்கப்படும்.இதுவரை 18 ஆயிரம் மருத்துவமனைகள் கிளினிக்குகள் மட்டுமே பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளன. 52 ஆயிரம் மருத்துவமனைகள் விண்ணப்பிக்கவில்லை. வரும் 31ம் தேதி வரை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்பின் மருத்துவமனைகள் பதிவு செய்யவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும்.உரிமம் கோரி விண்ணப்பித்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தீர்ப்பாய உத்தரவின்படி மருத்துவ கழிவுகள் வெளியேற்றுவதற்கான வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X