குழாய் பதிக்கும் பணி: நடுமலையில் போக்குவரத்து மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழாய் பதிக்கும் பணி: நடுமலையில் போக்குவரத்து மாற்றம்

Added : மே 21, 2019

வால்பாறை:நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் குழாய் பதிக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
ஆழியாறிலிருந்து வால்பாறைக்கு வரும் வழியில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்புச்சுவர் மற்றும் சிறிய பாலம் விரிவுபடுத்தும் பணியும் நடக்கிறது.மழை காலங்களில் ரோட்டில் தண்ணீர் வீணாக செல்லாமலும், மழை நீர் சேமிக்கும் விதமாகவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறிய பாலத்தின் மத்தியில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
வால்பாறை நகரிலிருந்து நடுமலை எஸ்டேட் செல்லும் ரோட்டில் நேற்று குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதனையடுத்து இந்த வழியாக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனால், கருமலை பாலாஜி கோவில், வேளாங்கண்ணிமாதா ஆலயம் செல்லும் சுற்றுலாபயணிகள் வெள்ளமலை டனல் வழியாக மாற்று வழியில் சென்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் இந்தாண்டு பருவமழைக்கு முன்னதாகவே பாலத்தில் குழாய் பதிக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X